Madurai Shiva Temple

Lord Shiva Temple in Madurai District


Arulmigu Meenakshi Sunthareswarar Swamy Temple Madurai

சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார். சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார். சுந்தரேசுவரர் , சொக்கநாதர், சோமசுந்தரர் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார். இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன..

More Details

Madurai District Shiva Temple



வ.எண் மதுரை மாவட்ட சிவன் திருக்கோயில்கள்
1 அருள்மிகு ஸ்ரீ மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், , மதுரை
2 அருள்மிகு ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மதுரைதிருக்கோயில், அவனியாபுரம் , மதுரை
3 அருள்மிகு ஸ்ரீ நடேஸ்வரர் திருக்கோயில், அனுப்பானடி , மதுரை
4 அருள்மிகு ஸ்ரீ ஐராவதீஸ்வரர் திருக்கோயில், ஆணையூர் , மதுரை
5 அருள்மிகு ஸ்ரீ புட்டு சொக்கநாதர் திருக்கோயில், ஆரப்பாளையம் , மதுரை
6 அருள்மிகு ஸ்ரீ சொக்கலிங்கசாமி திருக்கோயில், உசிலம்பட்டி , மதுரை
7 அருள்மிகு ஸ்ரீ சந்தனமகாலிங்கம் திருக்கோயில், சதுரகிரி , மதுரை
8 அருள்மிகு ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் திருக்கோயில், தசதுரகிரி , மதுரை
9 அருள்மிகு ஸ்ரீ அழகியசோழீஸ்வரர் திருக்கோயில், சொக்கலிங்கபுரம் , மதுரை
10 அருள்மிகு ஸ்ரீ சோமலிங்கேசுவரர் திருக்கோயில், சொக்கிகுளம் , மதுரை
11 அருள்மிகு ஸ்ரீ அருணாச்சல ஈஸ்வரர்திருக்கோயில், சோழவந்தான் , மதுரை
12 அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், சௌடார்பட்டி , மதுரை
13 அருள்மிகு ஸ்ரீ குருநாதர்சுவாமி திருக்கோயில், திருமங்கலம் , மதுரை
14 அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், திருமங்கலம் , மதுரை
15 அருள்மிகு ஸ்ரீ திருமறைநாதர் திருக்கோயில், திருவாதவூர் , மதுரை
16 அருள்மிகு ஸ்ரீ ஏடகநாதேசுவரர் திருக்கோயில், திருவேடகம் , மதுரை
17 அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில், நாகமலை , மதுரை
18 அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோயில், மதுரை , மதுரை