Shiva Temple

Lord Shiva Temple in Chennai



Mylapore Arulmigu Kabaliswarar Temple - Thiru mayilai

இறைவி மயிலாக வந்து இறைவனை பூசித்தமையால் இப்பதி மயிலாப்பு ,மயிலாப்பூர் என்ற பெயர்களை கொண்டது. அவற்றின் மரூஉவே மயிலை என்பதாகும். கபாலீஸ்வரர் வீற்றிருந்ததால் கபாலீச்சரம் என்ற பெயரும் பெற்றது.புண்ணை இத்தலத்து விருட்சமாதலால் புன்னைவனம் என்பதும்,வேதங்கள் பூசித்தமையால் வேதபுரி என்பதும் சுக்கிரன் பூசித்தமையால் சுக்கிரபுரி என்பதும் இத்தலத்துக்குரிய வேறு பெயர்களாகும்.இத்தலத்தில் திருஞானசம்மந்தர் அருளிய அங்கம் பூம்பாவை ஒவ்வொரு பாடலிலும் மயிலையில் மாதந்தோறும் புரட்டாசி முதல் ஆணி வரை நடைபெறும் திருவிழாக்களை கூறி இந்த விழாக்களை காணாமல் போதியோ பூம்பாவாய் என அருள செய்கின்றார்.

உமையம்மையார் மயிலுருக்கொண்டு கபாலீசுவரரைப் பூஜித்த தலம். முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம். இராம பிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம். பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத் தலம். ஆளுடைய பிள்ளை - ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற திருத்தலம்.சீர்த்திமிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு திருப்புகழைப் பெற்ற தலம். வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொன்மைத்தலம்

More Details http://mylaporetemple.blogspot.com/

Chennai District Shiva Temple



வ.எண் சிவன் திருக்கோயில்கள்
1 அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர்,சென்னை
2 அருள்மிகு ஸ்ரீ மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர் , சென்னை
3 அருள்மிகு ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில் , சென்னை
4 அருள்மிகு ஸ்ரீ திருவல்லீஸ்வரர் திருக்கோயில்,திருவலிதாயம், பாடி , சென்னை
5 அருள்மிகு ஸ்ரீ காளத்தீசுவரர் திருக்கோயில்,, சென்னை,பாரிமுனை,
6 அருள்மிகு ஸ்ரீ நடராசர் திருக்கோயில்,பாரிமுனை , சென்னை
7 அருள்மிகு ஸ்ரீ மல்லீசுவரர் திருக்கோயில்,பாரிமுனை , சென்னை
8 அருள்மிகு ஸ்ரீ கச்சாலீசுவரர் திருக்கோயில், பாரிமுனை, சென்னை
9 அருள்மிகு ஸ்ரீ சென்ன மல்லீசுவரர் திருக்கோயில், பூங்கா நகர், சென்னை
10 அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரேசுவரர் திருக்கோயில்,பூங்கா நகர், சென்னை
11 அருள்மிகு ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோயில்,சௌக்கார்பேட்டை, சென்னை
12 அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயில், யானைக்கவுனி , சென்னை
13 அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயில், கொண்டித்தோப்பு , சென்னை
14 அருள்மிகு ஸ்ரீ கொண்டித்தோப்பு ஆதிபுரீசுவரர் திருக்கோயில், , சென்னை
15 அருள்மிகு ஸ்ரீ பூமிசுவரர் திருக்கோயில், புதுவண்ணாரப்பேட்டை, சென்னை
16 அருள்மிகு ஸ்ரீ காளத்தீசுவரர் திருக்கோயில், புதுவண்ணாரப்பேட்டை , சென்னை
17 அருள்மிகு ஸ்ரீ அகத்தீசுவரர் திருக்கோயில்,குரோம்பேட்டை , சென்னை
18 அருள்மிகு ஸ்ரீ நீலகண்டேசுவர் திருக்கோயில்,பழைய பல்லாவரம், சென்னை
19 அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாத சுவாமி திருக்கோயில்,தாம்பரம் சானிட்டோரியம், சென்னை
20 அருள்மிகு ஸ்ரீ வேதபுரீசுவரர் கோயில் திருக்கோயில், மடிப்பாக்கம்,சென்னை
21 அருள்மிகு ஸ்ரீ தர்மலிங்கேசுவரர் கோயில் திருக்கோயில் ,நங்கநல்லூர் , சென்னை
22 அருள்மிகு ஸ்ரீ அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் , நங்கநல்லூர் , சென்னை
23 அருள்மிகு ஸ்ரீ நந்தீசுவரர் கோயில்திருக்கோயில் ,ஆதம்பாக்கம், சென்னை
24 அருள்மிகு ஸ்ரீ பரசுராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் , அயனாவரம்,சென்னை
25 அருள்மிகு ஸ்ரீ குருங்கலீஸ்வரர் திருக்கோயில் , கோயம்பேடு, சென்னை
26 அருள்மிகு ஸ்ரீ வட நாகேஸ்வரர் திருக்கோயில் , குன்றத்தூர் ,சென்னை
27 அருள்மிகு ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் ,மாடம்பாக்கம், சென்னை
28 அருள்மிகு ஸ்ரீ விருபாக்ஷேஸ்வரர் திருக்கோயில் ,மயிலாப்பூர் , சென்னை
29 அருள்மிகு ஸ்ரீ அக்கீஸ்வரர் திருக்கோயில் , பம்மல் ,சென்னை
30 அருள்மிகு ஸ்ரீ கங்காதீஸ்வரர் திருக்கோயில்,புரசைவாக்கம் , சென்னை
31 அருள்மிகு ஸ்ரீ காரணீஸ்வரர்திருக்கோயில் ,சைதாப்பேட்டை, சென்னை
32 அருள்மிகு ஸ்ரீ திருவேட்டீஸ்வரர் திருக்கோயில்,திருவல்லிக்கேணி ,சென்னை
33 அருள்மிகு ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில்,திருவொற்றியூர் ,சென்னை
34 அருள்மிகு ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்,திருமுல்லைவாசல்,,சென்னை
35 அருள்மிகு ஸ்ரீ திரிசூலநாதர் திருக்கோவில், திரிசூலம், சென்னை
36 அருள்மிகு ஸ்ரீ தண்டீஸ்வரர் திருக்கோவில்,வேளச்சேரி, சென்னை
37 அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வில்லிவாக்கம், சென்னை
38 அருள்மிகு ஸ்ரீ ரவீஸ்வரர் திருக்கோவில்,வியாசர்பாடி , சென்னை
39 அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நெமிலிச்சேரி, சென்னை
40 அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில்,ஜார்ஜ் டவுன், சென்னை
41 அருள்மிகு ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்,சிந்தாதரிபேட்டை, சென்னை
42 அருள்மிகு ஸ்ரீ கச்சளீஸ்வரர் திருக்கோவில்,ஜார்ஜ் டவுன், சென்னை
43 அருள்மிகு ஸ்ரீ பால்னீஸ்வரர் திருக்கோவில்,இராயப்பேட்டை, சென்னை
44 அருள்மிகு ஸ்ரீ சௌந்தரேசுவரர் திருக்கோவில்,சைதாப்பேட்டை, சென்னை
45 அருள்மிகு ஸ்ரீ மார்கண்டேசுவரர் திருக்கோவில், முகப்பேர் , சென்னை
46 அருள்மிகு ஸ்ரீ வைத்தீஸ்வரன் திருக்கோவில், பூந்தமல்லி, சென்னை
47 அருள்மிகு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோவில், மயிலாப்பூர், சென்னை
48 அருள்மிகு ஸ்ரீ காரணீஸ்வரர் திருக்கோவில், மயிலாப்பூர், சென்னை
49 அருள்மிகு ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவில், நடேசன் சாலை,மயிலாப்பூர், சென்னை
50 அருள்மிகு ஸ்ரீ விருபாட்சீஸ்வரர் திருக்கோவில், மயிலாப்பூர், சென்னை
51 அருள்மிகு ஸ்ரீ மல்லீஸ்வரர் திருக்கோவில்,பஜார் சாலை, மயிலாப்பூர், சென்னை
52 அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், கொளப்பாக்கம் கிராமம்-வண்டலூர், சென்னை
51 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் கோயில் திருக்கோவில், மாதவரம்,சென்னை
51 அருள்மிகு ஸ்ரீ அருள்மிகு தாத்திரீஸ்வரர் கோயில் திருக்கோவில்,சித்தர்காடு (திருமணம்) , பூந்தமல்லி,சென்னை