இறைவர் : அருள்மிகு ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி
இறைவி :ஸ்ரீ மங்கள நாயகி
தல மரம் :சந்தனம் மரம்
தீர்த்தம் : குப்த கங்கை, இமய தீர்த்தம்
அருள்மிகு மங்கள நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ வாஞ்சிநாத ஸ்வாமி திருக்கோயில் திருவாஞ்சியம், திருவாரூர்
எமன் வழிபட்ட தலம். :
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம். திருவாசகத்திலும், அருணகிரிநாதர் வாக்கிலும் இத்தலம் இடம் பெறுகின்றது. காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு காவிரித் தலங்களுள் இது ஒன்றாகும். மற்றவை :- 1. திருவையாறு 2. வேதாரண்யம் 3. மயிலாடுதுறை 4. திருவிடைமருதூர் 5. திருவெண்காடு.
திருமால் சிவபெருமானை வழிபட்டு, இலக்குமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்ற தலம். (திருவை வாஞ்சித்த தலம் - திருவாஞ்சியம்) எமன் வழிபட்ட தலம். இங்கு எமனுக்குத் தனிக்கோயிலுள்ளது. இத்தலத்தில் இறப்பவர்க்கு எமவாதனையில்லை. கோயிலுள் எமவாகனமும் உள்ளது.இங்குள்ள துர்க்கை சந்நிதி விசேஷமானது. இத்திருக்கோயிலில் உள்ள நந்திதேவர் ‘கருவறுத்தவர்’என்றழைக்கப்படுகிறார். மாசி மகப்பெருவிழா விழா சிறப்பானவை. எமன், உலக உயிர்களைக் கொல்லும் பாவம் தீர, இங்கு இறைவனை வழிபட்டு இறைவனுக்கு வாகனமாகும் தன்மையைப் பெற்றான். ஆதலின், எமனுக்குக் காட்சி தரும் ஐதீகவிழா மாசிமகப் பெருவிழாவில் இரண்டாம் நாள் விழாவாக நடைபெறுகிறது.
திருக்கோயில் முகவரி :
மங்கள நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ வாஞ்சிநாத ஸ்வாமி திருக்கோயில், திருவாஞ்சியம், திருவாரூர் அருள்மிகு வாஞ்சிநாத ஸ்வாமி திருக்கோயில், திருவாஞ்சியம், திருவாரூர் மாவட்டம், .
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்:
மயிலாடுதுறையிலிருந்து 25கி.மீ தொலைவில் உள்ள நன்னிலத்திலிருந்து எட்டு கி.மீ தொலைவில் உள்ளது.[1] திருவாரூர்-குடவாசல் சாலையிலும் வரலாம்.[4]