இறைவர் : அருள்மிகு ஸ்ரீ வில்வாரண்யேஸ்வரர் சுவாமி
இறைவி :ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள்
தல மரம் :வில்வ மரம்
தீர்த்தம் : பிரம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், காண்டீப தீர்த்தம்(அருச்சுன தீர்த்தம்), முள்ளியாறு் தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருக்கொள்ளம்பூதூர், திருவாரூர்
திருக்கொள்ளம்பூதூர் ஸ்ரீ_வில்வாரண்யேஸ்வரர் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருக்கொள்ளம்பூதூர், திருவாரூர்
தல வரலாறு:
சம்பந்தர் தம் அடியார்களுடன் கொள்ளம்புதூர் இறைவனை தரிசிக்க திருக்கொள்ளம்புதூர் வரும் போது காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அக்கரையில் உள்ள கொள்ளம்புதூர் ஆலயத்திற்குச் செல்ல ஓடக்காரன் ஒருவரும் காணப்படவில்லை. அடியார்கள் திகைத்து அக்கரை செல்வது எப்படி என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சம்பந்தர் கொள்ளம்புதூர் இறைவனை எண்ணித் துதித்து ஓடக்காரன் இல்லாமலேயே ஓடத்தில் தம் அடியார்களுடன் ஏறி "கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்" என்று தொடங்கும் பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடமும் தானாகவே வெள்ளத்தில் ஓடி சம்பந்தரையும் அவர்தம் அடியார்களையும் அக்கரை கொண்டு சேர்த்தது. திருஞானசம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு. இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு #மறுநாள் சிறப்பாக நடக்கிறது. ஆற்றின் அக்கரையில் சம்பந்தருக்கு தனி கோவில் ஒன்றும் உள்ளது. இந்த ஆற்றை மக்கள் வழக்கில் ஓடம் போக்கி ஆறு என்று வழங்குகின்றனர்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு ஸ்ரீ பிரத்தியட்ச மின்னம்மஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருக்கொள்ளம்பூதூர், திருவாரூர் அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில், திருக்களம்பூர், திருக்களம்பூர் அஞ்சல், திருவாரூர் மாவட்டம், PIN - 622 414.
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்..
அமைவிடம்:
கொரடாச்சேரியில் இருந்து 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மி. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி சுமார் ஒரு கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். கோவில் வரை பாதை உள்ளது. அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில், திருக்களம்பூர், திருக்களம்பூர் அஞ்சல், திருவாரூர் மாவட்டம், PIN - 622 414.