இறைவர் : அருள்மிகு ஸ்ரீ கரும்பேஸ்வரர் சுவாமி
இறைவி :ஸ்ரீ சவுந்தரநாயகி அம்பாள்
தல மரம் :நந்தியவர்தம் மரம்
தீர்த்தம் : சூரிய, சந்திர தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி. அம்பாள் சமேத ஸ்ரீ கரும்பேஸ்வரர்! திருக்கோயில் -திருவெண்ணியூர்,திருவாரூர்
இந்த இறையனார் உறைந்திருக்கும் திருத்தலம், திருவெண்ணியூர் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட கோயில்வெண்ணி. தஞ்சையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலை வில் உள்ளது கோயில்வெண்ணி. கரிகால் சோழப் பேரரசர் வெண்ணிப் போர் நடத்தி, எதிரிகளை வென்ற புகழுடைத்த ஊர் என்று சரித்திரத்திலும் பெரிதும் பேசப்படுகிறது இவ்வூர். புலவர் வெண்ணிக் குயத்தியார் பிறந்த ஊர் எனும் தகவல் மூலம் சங்க காலத்துடன் ஒப்பிட்டு இதன் தொன்மையை அறிய முடிகிறது. சுமார் 2,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது
அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி. அம்பாள் சமேத ஸ்ரீ கரும்பேஸ்வரர்! திருக்கோயில் -திருவெண்ணியூர் தல வரலாறு.
சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை...
சித்தர்கள் பாடல்களில் இந்தக் கோயிலில் சர்க்கரை நோய்க்கான பிரார்த்தனை முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாம்பாட்டி சித்தரும் கோயில்வெண்ணி இறைவன் சர்க்கரை நோய் தீர்ப்பது குறித்துப் பாடியுள்ளார். ‘ரசமணியோடு வெல்லம் கலந்து, கோயிலை வலம் வந்து, சுவாமிக்கு நிவேதனம் செய்து பிரார்த்தித்தால், குருதியில் சர்க்கரை குறையும்’ என்று காகபுஜண்டர் பாடியுள்ளார். ஆனால், இன்றைய விலை வாசியில் ரசமணியை வாங்கிப் படைப்பது என்பது சாத்தியமல்ல. எனவே, மக்கள் தங்களால் இயன்றளவு ரவையை வாங்கி, வெல்லம் கலந்து, படைத்து வழிபடுகின்றனர். எறும்புகளுக்கு அது உணவாகிறது. இறைவன் அதை ஏற்று, சர்க்கரை நோய்க்கு நிவாரணம் அளிப்பதாக நம்பிக்கை. ‘‘ரவையும் வெல்லமும் கலந்து இடுவது போல், அன்னதானத்துக்கு அரிசியும் வெல்லம் வாங்கிக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்’’ என்கிறார் பிரபாகர குருக்கள். கோயிலில் கருவறையைச் சுற்றி அகழி அமைப்பு உள்ளது. அந்தக் காலத்தில் இந்த அகழியில் தளும்பத் தளும்ப தண்ணீர் ஓடுமாம். மூலவர் கரும்பின் உருவமாக இருப்பதால், கைகளால் வேகமாகத் தேய்க்க முடியாத அமைப்பு என்பதால், அபிஷேகம் கூட ஒற்றி எடுப்பதுதானாம். இங்கே மூலவரையும் அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றபடி தரிசிக்கலாம். கிழக்கு நோக்கி கரும்பேஸ்வரரும் தெற்கு நோக்கி அம்பாளும் அருள்பாலிக்கிறார்கள். அம்பாள் சௌந்தரநாயகி, பெயருக்கேற்றபடி மிக அழகிய திருக்கோலத் துடன் காட்சி தருகிறாள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு, மழலைப் பேறு அருளும் மகா சக்தி படைத்தவள். குழந்தைக்காகப் பிரார்த் திக்கும் பக்தர்கள், வளையல்களை வாங்கி வந்து அம்பாள் சந்நிதியில் கட்டிவிடுகின்றனர். பெண்கள் வளையல் சார்த்தி வேண்டிக் கொண்டால் கண்டிப்பாகக் கருத்தரிப்பர் என்பது பலர் வாழ்வில் கண்ட உண்மை. இத் தலம் திருக்கருகாவூருக்கு மிக அண்மையில் உள்ளது. இங்கே அம்பாளை வேண்டி கருவுறும் பெண்கள், திருக்கருகாவூரில் கருவைக் கருகாமல் காப்பாற்றிக் குழந்தை நல்லபடியாகப் பிறக்கப் பிரார்த்திக் கொள்கின்றனர். கொடுப்பது அழகிய நாயகி; காப்பது கர்ப்பரட்சாம்பிகை! என்னே அவள் அன்பு, கருணை!
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி. அம்பாள் சமேத ஸ்ரீ கரும்பேஸ்வரர்! திருக்கோயில் -திருவெண்ணியூர்,திருவாரூர் அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில், - திருவெண்ணியூர்,திருவாரூர் திருவாரூர் மாவட்டம்.
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்:
தஞ்சையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது கோயில் வெண்ணி. தஞ்சையிலிருந்து சாலியமங்கலம் வழியாக நீடாமங்கலம் செல்லும் சாலையில், கோயில் வெண்ணி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கோயிலுக்குச் செல்லலாம்.