Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Othavaneswara Swamy Temple, ThiruChotruthurai |

அருள்மிகு சங்கரநாயகி அம்பாள் சமேத அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில்- திருவாதிரைமங்கலம்


அருள்மிகு சங்கரநாயகி அம்பாள் சமேத அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில்- திருவாதிரைமங்கலம்



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ சிவலோகநாதர் ஸ்வாமி 

இறைவி :ஶ்ரீ சங்கரநாயகி அம்பாள்

தல மரம் :மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

ThiruvarurDistrict_SivaloganatharTemple_Thiruvathiraimangalam-shivanTemple


Arulmigu SivalogaNathar Swamy Temple, Thiruvathirai Mangalam, | அருள்மிகு சங்கரநாயகி அம்பாள் சமேத அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில்- திருவாதிரைமங்கலம் தல வரலாறு

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாதிரைமங்கலம் சிவலோகநாதர் சிவாலயம் திருமண வரம், நோய் தீர்க்கும் சக்தி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது. சோழநாட்டின் தேவார வைப்புத்தலம், சோழர்கள் எழுப்பி, மராட்டியர்கள் திருப்பணி செய்த கோவில், முட்புதரில் மறைந்திருந்த கோவிலை 82 வயது சிவனடியார் திருப்பணி செய்த ஆலயம், திருப்புமுனை, திருமண வரம், நோய் தீர்க்கும் சக்தி கொண்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, திருவாதிரைமங்கலம் சிவலோகநாதர் சிவாலயம்.

ஏழாம் நூற்றாண்டிலேயே சிறப்பு பெற்று விளங்கிய இந்தத் திருக்கோவில், நெடுங்காலமாக முட்செடிகளாலும், புதர்களால் மறைந்திருந்தது. இந்த ஊரை பூர்வீகமாக கொண்டு, ரெயில்வே தபால் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராதாகிருஷ்ணன் என்ற 82 வயது சிவனடியார், ஆலயத்தின் நிலை கண்டு வருந்தினார். ஆனால் திருப்பணி செய்வதற்கு அவரிடம் பணம் இல்லை. இந்த நிலையில் அவரது மகனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தன் மகனிடம், ஆலயத்தை திருப்பணி செய்யும் தன்னுடைய எண்ணம் பற்றி கூறினார்.

தந்தையின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய அவர், அதற்கான பணிகளை மேற்கொண்டார். தனி மனித விருப்பம், முயற்சியில் குடும்பமே தம்மை ஈடுபடுத்திக்கொண்டது. அதன் காரணமாக 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆலயத் திருப்பணி, 2016-ல் முடிவடைந்து, கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனும், இறைவியும், அந்தப் பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது, தன்னை நாடிவரும் அனைவருக்கும் தனது அருளாசியை வழங்கி வருகிறார்கள்.

திருவாதிரைமங்கலம் சோழமன்னர்கள் ஆட்சியில், பனையூர் நாட்டில் அமைந்த ஊராக இருந்துள்ளது. மேலும், இங்கு அமைந்துள்ள தெய்வ வடிவங்கள் அனைத்தும், பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். சிற்பங்கள் சிறிது சேதம் அடைந்திருந்தாலும், அதன் கலைநயம், நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

திருவாதிரை மங்கலம், பழமையான சிவாலயம் என்பதை, திருநாவுக்கரசர் இத்தலத்தை தேவாரத்தில் வைப்புத்தலமாக வைத்து பாடியிருப்பது உறுதி செய்கிறது. திருவாதிரை விழா சிறப்பாக நடைபெற்று வந்த ஊராக இருந்ததால், ‘திருவாதிரைமங்கலம்’ என்பதே ஊர்ப் பெயராக விளங்கியிருக்கிறது. இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான், சிவலோகநாதர், சங்கர நாயகி, பலிபீடம், சண்டிகேசுவரர், தட்சிணாமூர்த்தி ஆகிய சிலை வடிவங்கள், பிற்காலச்சோழர் காலமான கி.பி.12, 13-ம் நூற்றாண்டினை சேர்ந்தது என்பதை உறுதி செய்வதாக உள்ளன.

இதேபோல, திருப்பணிக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஆலயத்தின் தொன்மையை பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றன. இந்த ஆலயம் பிற்காலச் சோழர்களின் கலைநயத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இறைவன் வாழும் கருவறையானது, ஜகதி, பத்மம், குமுதம், வேதிகை, அரைத்தூண்கள், காபோதகம் கொண்டு திகழ்கிறது.

திருவாதிரைமங்கலம் என்னும் அழகிய கிராமத்தின் தென்கிழக்கு மூலையில், இந்த ஆலயம் அமைந்துள்ளது. புனரமைப்பில் பழங்கற்கள் பயன்படுத்தப்படாததால், புதுக்கோவில் போல தோற்றம் அளிக்கிறது. என்றாலும், ஆலயத்தின் உள்ளே இருக்கும் மூலமூர்த்திகள், பிற்காலச் சோழர்காலத்தின் கலை நயத்தை உணர்த்துகின்றன. ஆலயத்தின் எதிரே திருக்குளம் காணப்படுகிறது.

எளிய வளைவு கொண்ட நுழைவு வாசல், உள்ளே பலிபீடம், நந்தி சிலையும் நம்மை வரவேற்கின்றன. உள்ளே மகாமண்டபம், இடதுபுறம் விநாயகப்பெருமான் வீற்றிருக்கிறார். வலது புறம் வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் தேவ மயிலைக் கொண்டு காட்சி தருகின்றார். நடுநாயகமாக இறைவன் சிவலோகநாதர், வட்ட வடிவ ஆவுடையாராக எளிய தோற்றத்தில், கிழக்கு முகமாய் காட்சி அருள்கிறார். இறைவன் திருமேனி ஒளி வீசும் கோலத்தில் அமைந்துள்ளது.

அன்னை நின்ற கோலத்தில், தன்னுடைய மேல் இரண்டு கரங்களில் ருத்ராட்ச மாலை, தாமரை கொண்டும், கீழ் வலது கரத்தால் அபய முத்திரை காட்டியும், இடது கரத்தை இடுப்பில் வைத்தபடியும் அருள்பாலிக்கிறார். அன்னையின் திருமுடி எழிலான மகுடம் தாங்கி இருக்கிறது. கருவறைச் சுற்றில் தெற்கே தட்சிணாமூர்த்தி, வடக்கே துர்க்கை, எதிரில் சண்டி கேசுவரர் காட்சிதர, வடகிழக்கில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. ஆலயத்தின் உட்புறத்தில் பல்வேறு வகையான பூச்செடிகள் பூத்துக் குலுங்குகின்றன.



இத்தலத்து இறைவன் சிவலோகநாதர் மீது, பங்குனி மாதத்தில் முதல் 20 நாட்களில் காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் படுவது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகம். இந்த ஆலயத்திற்கு வந்து, இறைவனையும், இறைவியையும் வழிபட்டு செல்பவர்களுக்கு, வாழ்வில் நல்ல பல திருப்பம் உண்டாகும் என்கிறார்கள்.





திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ சிவலோகநாதர் சிவாலயம் திருக்கோயில்
திருவாதிரைமங்கலம்
திருவாரூர் மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இந்த ஆலயம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.



ஆலயம் அமைவிடம்: