Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

SivaSaila Nathar Swamy Shiva Temple - Aathiechuram,Thirunelveli

அருள்மிகு ஸ்ரீ பரமகல்யாணி அம்பாள் சமேத சிவசைலநாதர் சுவாமி திருக்கோவில், அத்தீச்சுரம்/சிவசைலம்


SivaSaila Nathar Swamy Shiva Temple - Aathiechuram,Thirunelveli !!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ சிவசைலநாதர்

இறைவி :ஸ்ரீ பரமகல்யாணி அம்மன்

தல மரம் : கடம்ப மரம்

தீர்த்தம் : கடனா நதி

ThirunelveliDistrict_SivasailanatharTemple_Athichuram-shivanTemple


அருள்மிகு ஸ்ரீ பரமகல்யாணி அம்பாள் சமேத சிவசைலநாதர் சுவாமி திருக்கோவில், அத்தீச்சுரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் சிவபெருமான், உமையாளுடன் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள ஆலயங்களில் அருள்மிகு பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் ஆலயமும் ஒன்று. திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிவபெருமான், உமையாளுடன் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள ஆலயங்களில் அருள்மிகு பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் ஆலயமும் ஒன்று. நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம் வழியாக தென்காசி செல்லும் சாலையில் அம்பாசமுத்திரத்தில் இருந்து 15-வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆழ்வார்குறிச்சியின் மேற்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கோவில். கடனையாறு என்று அழைக்கப்படும் கருணையாற்றின் கரையில் அமைந்துள்ள சிவசைலம் என்னும் இவ்வூரின் பெயர் கடம்பவனமாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இக்கோவில்.

கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற் கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம்

தல வரலாறு:

இப்பகுதியை ஆண்ட மன்னர் சுதர்சன பாண்டியன் தினமும் சுவாமி தரிசனத்திற்கு வருவார். ஒரு நாள் அவர் வர தாமதம் ஆனதால் இனி எங்கே பூஜாரி தன்னிடம் வைத்திருந்த மாலையை, கோயிலில் தங்கிய தேவதாசிப் பெண்ணிடம் கொடுத்தார். அவள் பக்தியுடன் அந்த மாலையை தலையில் சூடிக்கொண்டாள். அடுத்த சில நிமிடங்களில் மன்னர் வந்து விட்டார். பூஜாரிக்கு உதறல் எடுத்தது. மன்னர் வருவதற்கு முன்பாக அப்பெண்ணிடம் மாலையை வாங்கி வைத்துக் கொண்டார். மன்னர் வந்ததும் அவருக்கு மாலையை பவ்யமாக அணிவித்தார். அதில் ஒருதலைமுடி நீளமாக இருந்தது மன்னர் கண்களில் பட்டுவிட்டது.

என்னையா.. முடியெல்லாம் இருக்கிறது என்ற மன்னர் பூஜாரியை ஏறிட்டு பார்த்தார். சுவாமிக்கு நீண்ட சடைகள் இருப்பதால் அந்த முடி இருக்கக் கூடும், என சிவன் மீது பாரத்தை போட்டு சொல்லிவைத்தார் பூஜாரி. மன்னருக்கு கோபம் வந்து விட்டது. இத்தனை நாள் நானும் வருகிறேன். ஒரு முறை கூட சிவனின் சடையை பார்த்ததில்லையே. எங்கே காட்டு, என்றார்.

மன்னர் சிவனின் சடையை பார்ப்பதற்காக கர்ப்ப கிரகத்தின் மற்ற மூன்று புற சுவர்களிலும் துளையிடப்பட்டன. நீண்ட நாளாக தனக்கு சேவை செய்யும் பயந்த சுபாவம் கொண்ட பூஜாரியை காப்பாற்றுவதற்காக சடையுடன் காட்சியளித்தார் சிவன். மன்னர் ஆச்சரியப்பட்டார். இதனால்தான் சிவன் சடையப்பர் என அழைக்கப்படுகிறார். இன்றைக்கும் அந்த துவாரங்கள் வழியாக சிவனின் சடைமுடியினை நாம் அனைவரும் தரிசிக்கலாம்.

கோவில் உருவான வரலாறு : முன்னாளில் செந்தமிழ் பாண்டிய நாட்டினை மணலூரை தலைநகராக கொண்டு சைவநெறி போற்றி சிறப்பாக ஆண்டு வந்தார் சுதர்சனப்பாண்டியன். இந்த மன்னன் பிள்ளை பேறு இல்லாமல் பெரிதும் வருந்தினான். பிள்ளை பேற்றினை பெறுவதற்காக இம்மன்னன் பொருநையின் கரையில் அசுவமேத யாகம் ஒன்றை செய்தான். யாகத்தின் முடிவில் எத்திசையும் சென்று வரத்தக்க படையுடன் அரச பரியினை (குதிரை) அலங்கரித்து அதனுடன் தனது சகோதரன் சத்யமூர்த்தியையும் அனுப்பி வைத்தான். கிழக்கு திசையிலும், தென் திசையிலும் வெற்றி பயணம் முடிந்தபின் பரி மேற்கு திசையில் பயணத்தை தொடங்கியபோது சிவசைலநாதர் கந்தவேளிடம் ‘எண்திசை வென்று இத்திசை நோக்கி வரும் பரியினை கட்டுவாயாக’ என்று பணிந்தார்.

மறைச்சிறுவனாக சென்ற குமரக்கடவுள், அக்குதிரையை பிணித்தான். அதனால் எழுந்த போரில் சத்தியமூர்த்தி மண்ணில் வீழ்ந்திட மணலூருக்கு செய்தி பறந்தது. சுதர்சனப்பாண்டியன் மதகரியென களத்தில் புகுந்து மறைச்சிறுவனுடன் போர் புரிந்து முடிவில் மகுடம் கீழே விழ மண்ணில் மன்னன் வீழ்ந்த தருணத்தில், முருகன் வேலுடன் தோன்றி சிவசைலநாதர் சுயம்புமூர்த்தியாக இருக்கும் இடத்தை கூறி மறைந்தார். நான் என்ற அகப்பற்றும், நான் நடத்தும் வேள்விப்பரி இது என்ற புறப்பற்றும் அக்கணமே நீங்கப்பெற்ற சுதர் சனப்பாண்டியன், சுயம்பு மூர்த்தியின் தரிசனம் பெற்று மகிழ்ந்தான். இறைவன் அருளால் போர்க்களத்தில் மாண்டோர் மீண்டும் உயிர் பெற்று எழுந்தனர். பாண்டிய மன்னனின் பரிவேள்வி முழுமையடைந்தது. இறையருளால் கந்தவேளும், சுதர்சனப்பாண்டிய மன்னனின் மகவாக தோன்றினான். அம்மகவிற்கு குமரபாண்டியன் என பெயர் சூட்டி பெருமிதமடைந்த மன்னன் தனக்கு அருள்பாலித்த சிவசைலநாதருக்கு கோவில் எழுப்பினான்.



தல சிறப்பு:

லிங்கம் ஜடாமுடியுடன் காட்சி தருவது சிறப்பு.



இந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில் எழுந்து நிற்கும் நிலையில் உள்ள நந்திகேசுவர். இந்த நந்திகேசுவரர், இந்திர சபையின் தலைமை சிற்பி, மயனால் உருவாக்கப்பட்டதாகும். மேலும் இத்தலத்தில், கொலுவீற்றிருக்கும் பரமகல்யாணி அம்மன் நான்கு கைகளுடன் மேற்கு நோக்கி அமைந்திருப்பதும், நமனை நடுங்க வைத்து நமக்கெல்லாம் நல்அருள் பாலிக்கும் நாயகனை நாம் நான்கு திசைகளில் இருந்தும் தரிசிக்கக்கூடியதும் இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.

லிங்கம் உருவான கதை : திருமறை காலத்தில் திருக்கைலாயத்தில் அன்னை பார்வதிக்கும், பரமேஸ்வரனுக்கும் நடந்த திருக்கல்யாண வைபவத்தை பார்ப்பதற்காக முனிவர்களும், ரிஷிகளும், ஞானிகளும் வடக்கே சென்றதால் பூவுலகத்தை தாங்கும் பூமித்தாய் வடக்கே தாழ்ந்து தெற்கே உயர்ந்தாள். அதனால் உலகத்தை சமன் செய்வதற்காக இந்த உலகத்தை இயங்க செய்யும் காரணகர்த்தா, அகத்தியர் மற்றும் அத்ரி போன்ற முனிவர்களை தெற்கே அனுப்பினார். அவ்வாறு அனுப்பப்பட்ட அத்ரி முனிவர், சுயம்புலிங்க தரிசனம் காண விரும்பினார்.

அவருடைய ஆசையை நிறைவேற்றும் வகையில் அகத்திய முனிவர், மேற்கு தொடர்ச்சி மலையில் திரிகூடபர்வதம்(மூன்று மலைகள் சேருமிடம்) சென்று தவம் செய்தால் சுயம்புலிங்க தரிசனம் கிடைக்கும் என்று கூறினார். அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி அத்ரி முனிவர் தன் துணைவியார் அனுசுயாதேவி மற்றும் சீடர்கள் கோரட்சகர், தத்தாத்ரேயர் முதலானோரோடு திரிகூடபர்வதம் வந்து தவம் செய்ய தொடங்கினார். ஒருமுறை பவுர்ணமி தினத்தன்று பூஜை செய்வதற்கு கடம்ப மலர்களை பறிப்பதற்காக கடம்பவனம் சென்றனர் அத்ரி முனிவரின் சீடர்கள். அப்போது ஒரு பாறையின் மீது பசுக்கள் தாமாகவே பால் சொறிந்து செல்வதை கண்ட சீடர்கள், அப்பாறையின் அருகில் சென்று பார்த்தனர்.

அப்போது ஒரு சிறிய சுயம்புலிங்கத்தை அவர்கள் பார்த்து உவகையுடன் அத்ரி முனிவரிடம் தாங்கள் கண்டதை தெரிவித்தனர். இதனையடுத்து அத்ரி முனிவர், தனது துணைவியாருடன் வந்து சுயம்புலிங்கத்தை கண்டு ஆனந்த களிப்பில் தாம் கண்டதை வேதமந்திரமாக சொல்கிறார்.

அத்ரினாம் பூஜிதம ஸ்தம்பம் பக்தாபீஷ்ட பிரதாயகம் வந்கேதம் சிவசைலேசம் பிண்டிகாம் ஷோடசானுதம் சதுர்புஜாம் விசாலாட்சிம் தேவீம் பசுபதீம் முகீம் பாசாங்குச வல்லபாம் அம்பாம் தீரைலோகிய நாயகீம் தேவீம் பரமகல்யாணிம்‘’ “அத்ரியாகிய நானே தவத்தின் பயனாய் சுயம்புலிங்க தரிசனம் செய்ய நினைத்தேன். ஆனால் முக்திக்கு பக்திதான் அவசியம் என்று நிரூபிக்க பக்தர்களுக்கு காட்சியளித்த இறையே, பூமிக்கு மேலே ஒரு பாகமும் (சுமார் 3 அடி), கீழே 15 பாகமும் (சுமார் 45 அடி) கொண்டு சிவம் சைலத்தில் தோன்றியதால் சிவசைல நாதர் என்று அழைக்கப்பெறும் பெருமானே, நான்கு கைகளுடன் பரமகல்யாணி என்ற திருநாமத்துடன் விளங்கும் அன்னையை இங்கு காணும் பாக்கியத்தை தந்தருள்வீராக” என்பதே இப்பாடலின், இந்த தேவமந்திரத்தின் பொருளாகும். இதன் மூலம் சிவசைலத்தில் அமைந்துள்ள சிவபெருமான் பூமிக்கு மேலே ஒருபாகமும், பூமிக்கு கீழே 15 பாகமும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் அருள்மிகு ஸ்ரீ பரமகல்யாணி அம்பாள் சமேத சிவசைலநாதர் சுவாமி திருக்கோவில், அத்தீச்சுரம்/சிவசைலம்,
அருள்மிகு சிவசைலநாதர் திருக்கோவில்
சிவசைலம்
ஆழ்வார்குறிச்சி அஞ்சல்
அம்பாசமுத்திரம் வட்டம்
திருநேல்வேலி மாவட்டம்
PIN - 627414



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இவ்வாலயம் காலை 6-30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



அமைவிடம்:

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியிலிருந்து சுமார் ஐந்து கிமீ தொலைவிலுள்ளது.[4][5] சிற்பங்களும் கல்வெட்டுகளும் கொண்ட இது ஒரு பழமையான மிகப்பெரிய சிவன் கோயிலாகும்.[6] கடனாநதிக்கருகில் அமைந்துள்ள சிவசைலம் வெள்ளி மலை, மேற்கு தொடர்ச்சி மலை, முள்ளி மலைகளால் சூழப்பட்டுள்ளது. .