Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

ThiruKoteeswarar Swamy Shiva Temple, Thirukodikaaval, Thanjavur

அருள்மிகு வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,தஞ்சாவூர்


ThiruKoteeswarar Swamy Shiva Temple, Thirukodikaaval, Thanjavur !!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ திருக்கோடீஸ்வரர் சுவாமி

இறைவி :ஸ்ரீ வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி அம்பாள்

தல மரம் :பிரம்பு மரம்

தீர்த்தம் : சிருங்க தீர்த்தம், காவிரி தீர்த்தம்

ThanjavurDistrict_ThirukoteeswararTemple-Thirukodikaval_shivanTemple1


அருள்மிகு வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,தஞ்சாவூர்

திரிகோடி' என்றால், மூன்று கோடி என்று அர்த்தம். மூன்று கோடி மந்திர தேவதைகளுக்கு ஏற்பட்ட சாபம் இந்தத் தலத்தில் நீங்கியதால் `திருகோடிகா' என்று பெயர் உண்டாயிற்று. முக்தி வேண்டி மூன்று கோடி மந்திர தேவதைகள் இங்கே தவம் இருந்தனர். அப்போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, அனைவரும் விநாயகரைத் துதித்து வேண்டினர். அவரும் அவர்களைக் கரையேற்றி அருள் பாலித்தார். அகத்தியர் மந்திர தேவதைகளுக்கு உபதேசித்து மணலால் விநாயகரைப் பிடித்து வைத்து பிரதிஷ்டை செய்தார். முக்கோடி மந்திர தேவதைகள் இந்த விநாயகரை சஹஸ்ர நாமத்தால் (ஆயிரம் திருப்பெயர் களால்) அர்ச்சனை செய்து பூஜித்தனர். கரையேற்று விநாயகர் இத்திருக்கோயிலில் தென் மேற்கு திசையில் அருள்பாலிக்கிறார். இவருக்கு ஆயிரம் மலர்களால் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட, எல்லாவிதமான சாபங்களும் தோஷங்களும் நீங்கும். இங்கே மூன்று கோடி தேவதைகள் நந்தியின் கொம்பால் உண்டான சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டனர். அப்போது அங்கிருந்து கிளம்பிய திவ்ய ஒளிப்பிழம்பில் அனைவரும் ஐக்கியமாகி விட்டதாகத் தல புராணம் விவரிக்கிறது.

ஆலய அமைப்பு :

கோயிலின் உள்ளே நுழையும்போதே அழகான சிற்பங்கள் இரு புறமும் காணப்படுகின்றன. இடது புறம் அகஸ்தீஸ்வரர் சன்னதி உள்ளது. கொடி மர கணபதி, பலிபீடம், நந்தியைக் கடந்து உள்ளே சென்றால் பஞ்சமூர்த்தி அலங்கார மண்டபம், திரிபுர சுந்தரி அம்மன் சன்னதி உள்ளன.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,தஞ்சாவூர்
அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்,
திருக்கோடிக்காவல்,(வழி)
நரசிங்கன் பேட்டை--609 802.
திருவிடை மருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.



திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.



அமைவிடம்:

அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,(வழி) நரசிங்கன் பேட்டை--609 802. திருவிடை மருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.