Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Sunthreswarar Shiva Temple, Thirulokki, Thanjavur

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் - திருலோக்கி,தஞ்சாவூர்


Sunthreswarar Shiva Temple, Thirulokki, Thanjavur !!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமி

இறைவி :ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள்

தல மரம் :வில்வ மரம்

தீர்த்தம் : சந்திர தீர்த்தம்

ThanjavurDistrict_SunthareswararTemple-Thiruloki_shivanTemple


அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் - திருலோக்கி,தஞ்சாவூர்

மூலவர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் தாயார் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி காவிரி ஆற்றின் துணை நதியானப் பழவாற்றின் வடக்கிலும் ராமர் ஓடைக்கு தெற்கிலும் தமிழகத்தின் குறிப்பிடும் படியான சைவ மடமான காசி திருப்பனந்தாள் மடத்தினுடைய கிளை மடத்தின் மேற்கிலும் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்த இறைவனை பிருகு முனிவர் வழிபட்டதாகவும்,தேவர்களின் குருவான பிரகஸ்பதி எனப்படும் குருபகவான் வழிபட்டதாகவும் ,தர்மன் என்பவரின் மகனின் ஊமைத் தன்மை இப்பெருமானை வழிபட்டதன் மூலம் நீங்கப் பெற்றதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

குரு பகவான் வணங்கிய கதை :

மத்தியாசுனம் எனும் திருவிடைமருதூரில் எழுந்து அருள்பாலிக்கும் அருள்மிகு மகாலிங்க ஸ்வாமிப் பெருமானை குரு பகவான் வழிப்பட்டப் போது குரு பகவானின் பாவம் நீங்க மகாலிங்கச் சுவாமிப் பெருமான் தனக்கு ஈசான்ய திசையில் எழுந்து அருள்பாலிக்கும் அருள்மிகு சுந்தரேஸ்வரரை வணங்குமாறு பணிந்ததன் பெயரில் அபிஷேக ஆராதனைகளாலும், சரக்கொண்டை மரத்தின் அடியின் தவத்தாலும் அருள்மிகு சுந்தரேஸ்வரரை தேவர்களின் குருவான பிரகஸ்பதி எனும் குரு பகவான் வணங்கினார். குரு பகவானின் பக்தியால் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் தேவர்களும் பூதகணங்களும் புடைச் சூழ சுந்தரேஸ்வரர் பெருமான் அம்பாள் அகிலாண்டேஸ்வரியை ஆலிங்கனம் செய்தவாறு உமா மகேஷ்வரர் காட்சியாகத் தோன்றி ரிஷபா வாகனத்தில் அமர்ந்து குரு பகவானுக்கு காட்சி அளித்து அன்னாரின் பாவத்தைப் போக்கினார். தேவர்களின் குருவான பிரகஸ்பதி யாரையும் வணங்க மாட்டார்.ஆனால் லோகக் குருவின் காட்சியால் இங்கு குரு பகவான் இரு கைகளாலும் லோக குருவை வணங்கினார். அதனால் இது குரு பகவான் வணங்கிய ஸ்தலம் என்றும் அழைக்கப் படுகிறது. மேலும் இந்தக் கோயில் நித்யப் பிரதோஷ ஸ்தலம் என்றும் அழைக்கப் படுகிறது.

ஊர் பெயர் காரணம் : :

திருலோக்கிக்கு ஏமநல்லூர் என்றப் பெயரும் உண்டு. ஏமம் என்ற சொல்லுக்குப் பொன் என்றப் பொருளும் உண்டு. குரு பகவானுக்கு பொன்னவன் என்றப் பெயரும் உண்டு. அப்படி குரு வணங்கிய ஸ்தலம் ஆதலால் இந்த ஊர் ஏமநல்லூர் என்றப் பெயரிலும் அழைக்கப்பட்டது . இந்தக் கோயில் சோழர் காலக் கோவிலாகும். பேரரசன் ராஜராஜ சோழனின் மனைவியர்களில் ஒருவரின் பெயர் திரைலோக்கிய மாதேவி கருவறையில் உள்ளத் தெய்வம் சுந்தரர். எனவே இந்தக் கிராமம் திரைலோக்கி சுந்தரம் என்றப் பெயரிலும் அழைக்கப்பட்டது . தற்கால வழக்கில் திருலோக்கி என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலை பேரரசர் முதலாம் ராஜராஜ சோழன் கட்டியுள்ளார். இந்தக் கிராமத்தை "ராஜேந்திர சிம்ம வளநாட்டு மண்ணி நாட்டு ஏமநல்லூராகிய திரைலோக்கிய மாதேவி சதுர்வேதிமங்கலம்" எனப் பேரரசர் ராஜேந்திர சோழர் தன் காலக்கட்டத்தில் அழைத்தார். மேற்கூறிய இந்த ஊரின் பெயரினைப் பற்றிய குறிப்புகள் சோழர்காலக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை:

இந்தக் கோயில் நவகிரக பரிஹாரா ஸ்தலம் என்று கருதப்படுகிறது. புதன் தோஷத்தால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் தோஷத்திலிருந்து விடுபட இங்கு சிவபெருமானை வணங்கலாம். மேலும், பெண்கள் தங்கள் கணவரின் வாழ்க்கையின் நீண்ட ஆயுளுக்காக இங்கே இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த இறைவனை வியாழக் கிழமை குரு ஓரையில் வணங்குவதின் மூலம் குரு தோஷம், குரு புத்தி ,குரு நீச்சம் ,குரு திசை, குரு பகை ஸ்தானம் நடப்பவர்கள் நீங்கப் பெறலாம். திருமணத் தடை ,பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேர்வதற்கும் மற்றும் செல்வயின்மை ஆகியவற்றிலிருந்தும் இப்பெருமானை வழிபடுவதன் மூலம் விடுபடலாம்.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் - திருலோக்கி,தஞ்சாவூர்
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
திருலோக்கி
தஞ்சாவூர் மாவட்டம்.



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இந்த ஆலயம் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்



அமைவிடம்:

அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில், திருக்கோடிக்காவல்,(வழி) நரசிங்கன் பேட்டை--609 802. திருவிடை மருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.