Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Someswarar Temple,Kaaronam ,Kumbakonam |

அருள்மிகு தேனார் மொழியாள், அருள்மிகு ஶ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயில்- காரோணம்,கும்பகோணம்


அருள்மிகு தேனார் மொழியாள், அருள்மிகு ஶ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயில்- காரோணம்,கும்பகோணம்



இறைவர் : அருள்மிகு ஶ்ரீ சோமேஸ்வரர்  

இறைவி :ஶ்ரீ தேனார் மொழியாள்

தல மரம் : மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

KumbakonamDistrict_SomeswararTemple_Kaaronam-shivanTemple


Arulmigu Someswarar Temple,Kaaronam ,Kumbakonam | அருள்மிகு தேனார் மொழியாள், அருள்மிகு ஶ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயில்- காரோணம்,கும்பகோணம் தல வரலாறு

அமுத கும்பத்திற்கு ஆதாரமாயிருந்த சிக்கத்தில் (உறி) இருந்து தோன்றியவர். இதனால் சிக்கேசம் என்றும், பெருமானுக்கு சிக்கேசர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. சந்திரனுக்கு அருள் செய்ததால் சோமேசுவரர் என்றும், ஏழை சோமநாதர் என்றும், தேவிக்கு சோமசுந்தரி என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. வியாழன் வழிபட்டதால் வியாழசோமேசர் என்ற பெயரும் உள்ளது.

பிரளயம் ஏற்படுவதை அறிந்த பிரம்மன், சிவனின் ஆணைப்படி சிருஷ்டி பீஜங்களை (வித்துக்களை) ஒரு குடத்தில் வைத்துப் பூஜித்து வந்தான். பிரளயத்தின்போது அந்தக் குடம் மிதந்து வந்து ஓரிடத்தில் தங்கியது. சிவபெருமான் வேடராக வந்து அம்பினால் அக்குடத்தை உடைத்தார். அந்தக் குடத்தின் மூக்கு விழுந்த இடம் குடமூக்கு. அக்குடம் வைத்திருந்த உறி (உறி சிக்கம்) இத்திருக்கோயிலில் விழுந்து லிங்கமாக மாறியது. அக்காரணத்தால் இத்தலத்திலுள்ள இறைவன் சிக்கேசர் என்று அழைக்கப்படுகிறார். அம்பிகை இறைவனின் திருமேனியை ஆரோகணித்த காரணத்தால் இத்தலம் காரோணம் என்று அழைக்கப்படுகின்றது. அம்பிகைக்கு சோமசுந்தரி என்ற பெயரும் உண்டு.

இக்கோயில் கிழக்கு முகமாக அமைந்தது. ஐந்து நிலைகள் கொண்டது அதனை தாண்டி கொடிமரமும் நந்தியும் உள்ளன. அதன் வடக்கில் மாலீசர் சன்னதியும் மங்களாம்பிகையும் மேற்கு நோக்கி உள்ளனர். அருகில் கல்யாண விநாயகர் உள்ளார். .ஒருமுறை திருமால் இத்தலத்தில் வந்து சோமேசுவரரை ஓராண்டு காலம் பூசித்துவந்தார். அதன் பயனாக அசுரர்களை அழிக்கும் வல்லமையும் பெற்றார். அவ்வாறு மாலுக்கு அருள் செய்த ஈசன் பெயர் மாலீசர். ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்தால் மாலீசரையும் மங்களாம்பிகையையும் தரிசிக்கலாம்.

சோமனின் சாபம் தீர்த்த சிவன்

சோமன் எனப்படும் சந்திரனுக்கு பிரகஸ்பதியால் ஒரு சாபம் ஏற்பட்டது. அச்சாபம் நீங்கும் பொருட்டு இத்தலத்தில் ஒரு தீர்த்தத்தை (சந்திர புட்கரணி) உண்டாக்கி இறைவனை வழிபட்டான். இறைவன் அவனது சாபத்தை நீக்கி அருளினார். அதனால் இறைவனுக்குச் சோமேசர் என்ற பெயர் வழங்கலாயிற்று.

ஐந்து நிலை கோபுரத்தின் அடுத்து மூன்று நிலை கோபுரம் உள்ளது அதில் இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பிகை மேற்கு நோக்கியும் உள்ளதை காணலாம். பிரகாரத்தில் விநாயகர் சிற்றாலயம், முருகன் மற்றும் லிங்கமூர்த்தியும், திரிபுரசுந்தரியும் சன்னதிகள் அருகில் நின்ற கோலத்தில் விநாயகர் ஆகியோர் உள்ளனர். கருவறைகோட்ட தென்முகன், லிங்கோத்பவர் , ஆகியோரின் இரு புறமும் கை கூப்பிய சிலா ரூபங்கள் உள்ளன.



திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஶ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயில்
காரோணம்
தஞ்சாவூர் மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:



அமைவிடம்:

இக்கோயில் பொற்றாமரைக் குளத்திற்குக் கீழ்க்கரையில் உள்ளது. சாரங்கபாணி கோயிலின் தெற்கில் மதில் சுவற்றினை ஒட்டி அமைந்துள்ளது.