Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Baanapureeswarar Temple,Baanapuram ,Kumbakonam | |

அருள்மிகு ஶ்ரீபாணபுரீஸ்வரர் திருக்கோயில்- பாணாபுரம்,கும்பகோணம்


அருள்மிகு ஶ்ரீபாணபுரீஸ்வரர் திருக்கோயில்- பாணாபுரம்,கும்பகோணம்



இறைவர் : அருள்மிகு ஶ்ரீ பாணபுரீஸ்வரர்  

இறைவி :ஶ்ரீ அபிராமி

தல மரம் : மரம்

தீர்த்தம் : பாண தீர்த்தம்

KumbakonamDistrict_PaanapuriswararTemple_Paanaapuram-shivanTemple


Arulmigu Baanapureeswarar Temple,Baanapuram ,Kumbakonam| அருள்மிகு ஶ்ரீபாணபுரீஸ்வரர் திருக்கோயில்- பாணாபுரம்,கும்பகோணம் தல வரலாறு

ஶ்ரீ ராமபிரான் வனவாசம் மேற்கொண்ட காலத்தில் சீதையைச் தேடிச் செல்லும் வழியில் தன்னுடைய பாணத்தால் தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட காரணத்தினால் இத்தலத்து இறைவனுக்கு பாணபுரீஸ்வரர் என்ற பெயர் உண்டாயிற்று. [நந்தி தேவரிடம் பெற்ற சாபம் நீங்க, மகாவிஷ்ணுவின் அறிவுரைப்படி இத்தலத்தில் தங்கி சிவனை வழிபட்டு தனது சாபத்தை தீர்த்துக்கொண்டார் வியாச பகவான். அவர் இங்கு ஸ்தாபித்த லிங்கம் வியாச லிங்கம் என அழைக்கப்படுகிறது.

இந்த தலத்தில் சிவபெருமான் அமிர்த கலசத்தை உடைத்ததால் இங்கு வந்து பாணபுரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுளும், பொருள் அபிவிருத்தியும், மங்காத புகழும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இந்த ஆலயத்தின் இறைவியான சோமகாலம்பாளை வழிபடுபவர்களுக்கு உடல் மற்றும் மனதில் இருக்கும் சோம்பல்தனம் நீங்கி மிகுந்த சுறுசுறுப்பு ஏற்படும்



திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஶ்ரீபாணபுரீஸ்வரர் கோயில்
பாணாபுரம்
கும்பகோணம் வட்டம். ,
தஞ்சாவூர் மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இந்த ஆலயம் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்



அமைவிடம்:

இத்தலம் கும்பகோணம் மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் கோவிந்தபுரம் எனுமிடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் அமைந்நதுள்ளது.