Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

kambakareswarar Swamy Shiva Temple - Thirubhuvanam,Thanjavur

அருள்மிகு தர்மசவர்த்தினி சமேத கம்பகரேஸ்வரர் சுவாமி திருக்கோவில் - திருபுவனம்,தஞ்சாவூர்


kambakareswarar Swamy Shiva Temple - Thirubhuvanam,Thanjavur !!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ கம்பகரேஸ்வரர் சுவாமி

இறைவி :ஸ்ரீ தர்மசவர்த்தினி அம்பாள்

தல மரம் :வில்வம் மரம்

தீர்த்தம் : சரபர் தீர்த்தம்

ThanjavurDistrict_KambakareswararTemple-Thirubuvanam_shivanTemple


அருள்மிகு தர்மசவர்த்தினி சமேத கம்பகரேஸ்வரர் சுவாமி திருக்கோவில் - திருபுவனம்,தஞ்சாவூர்

போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய பெரிய கோவில், தீவினை நீக்கும் ஆதிசரபேஸ்வரர் சன்னிதி கொண்ட ஆலயம், சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்.

புராண வரலாறு

அச்சுவக்கிரீவன், விடபக்கிரீவன், வியாளக்கிரீவன் ஆகிய மூன்று அசுரர்களும், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அதன் பயனால் தேவராலும் மற்ற எவராலும் அழியாத வரம் பெற்றனர். பொன், வெள்ளி, இரும்புக்கோட்டை அமைத்து, தேவர்களையும், உலக உயிர்கள் அனைத்தையும் துன்புறுத்தி வந்தனர். நடுநடுங்கி வாழ்ந்த தேவர்களும், முனிவர்களும், சிவனிடம் சரணடைந்தனர். அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி, தமது நகைப்பினால் மூன்று அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் அழித்தொழித்தார். இதனால் அனைவரின் வாழ்விலும் பயத்தால் ஏற்பட்ட நடுக்கம் நீங்கியது. இதேபோல, இரண்யனை அழித்த நரசிம்மருக்கு ஏற்பட்ட அசுரத்தன்மையால், உலக உயிர்கள் நடுநடுங்கின. தேவர்கள் உள்ளிட்ட அனைவரின் வேண்டுதலின்படி, சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, நரசிம்மரைச் சாந்தப்படுத்தி, இயல்புநிலைக்கு வரச்செய்து அமைதியை ஏற்படுத்தினார். மொத்தத்தில், வாழ்வில் நடுக்கத்தை சந்தித்த அனைவரின், கம்பத்தினை (நடுக்கத்தை) நீக்கிய இறைவனாக, இத்தலத்து இறைவன் விளங்கியதால், ‘கம்பகரேஸ்வரர்’ என்றும், ‘நடுக்கம் தவிர்த்த பெருமான்’ என்றும் அழைக்கப்படுகின்றார்.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு தர்மசவர்த்தினி சமேத கம்பகரேஸ்வரர் சுவாமி திருக்கோவில் - திருபுவனம்,தஞ்சாவூர்-
தேப்பெருமாநல்லூர்,தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் ,



திருக்கோயில் திறக்கும் நேரம்:

தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும்



அமைவிடம்:

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில், கிழக்கே 6 கி.மீ. தொலைவில் திருபுவனம் அமைந்துள்ளது.