Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Gnanapatheeswara Swamy Temple,Panaiur

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஞானபதீஸ்வரர் சுவாமி திருக்கோவில் - பனையூர்


Arulmigu Gnanapatheeswara Swamy Temple,Panaiur !!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ ஞானபதீஸ்வரர்

இறைவி :ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

தல மரம் : மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

NagapatinamDistrict_SomasunthareswararTemple_Karuvazhakarai_Mayiladuthurai-shivanTemple


அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஞானபதீஸ்வரர் சுவாமி திருக்கோவில் - பனையூர்

ஞானபதீஸ்வரர் சுவாமி திருக்கோவில் - பனையூர்

புதுக்கோட்டை மாவட்டம் பனையூர் பகுதியில் அமைந்துள்ளது ஞானபதீஸ்வரர் ஆலயம். பனையூர் ஆதி காலத்தில் ‘பனையூர் குளமங்கலம்’ என்றும், ‘பனசை நகர்’ என்றும், ‘தென்பனசை நகர்’ என்றும், ‘பனையூர் பிராந்தக சருப்பேதிமங்கலம்’ என்றும் பல பெயர்களைக் கொண்டு விளங்கியதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஊர் மேலப் பனையூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊரின் வடகிழக்கில் சிவன் கோவிலும், அதன் எதிரில் ஊரணியும் அமைந்துள்ளது. இது பழங்காலத்திலேயே இவ்வூர் திட்டமிட்டு அமைக்கப்பெற்ற கிராமம் என்பதைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. பனையூரைச் சுற்றியுள்ள பாக்குளம், பனையக்குளத்தின் கீழ்க்கடைசி, மல்லியக்குடி ஏந்தல், வடக்கிக்கண்மாய் முதலிய இடங்களில் காணப்படுகின்ற பெருங்கற்கால மக்களின் பண்பாட்டுச் சின்னங்கள், பனையூரிலும் உள்ள கல்வெட்டுகள் இத்தலத்தின் சிறப்புகளை எடுத்துரைப்பதாக இருக்கின்றன.

பனையூரில் அமைந்த சிவன் கோவிலும், கோனாட்டு நாயகி அம்மன் என்ற பிடாரி அம்மன் ஆலயமும், அழகப்பெருமாள் என்ற மேலை வாசல் ஐயனார், பனையக்காட்டு ஐயனார் போன்ற கோவில்களும் இவ்வூருக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கின்றன. என்றாலும், இங்குள்ள சிவன் கோவிலே அனைத்துக்கும் தலைமையானது, மிகவும் பழமை யானது. இந்த ஆலயம் பெரிய திருச்சுற்று மதிலையும், தென்புறத்தில் குடவரை வாசல் என்ற முகமண்டபத்தையும் கொண்டு அமைந்துள்ளது.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஞானபதீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
- பனையூர்
நாகை மாவட்டம் ,



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இக்கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்து இருக்கும்.



அமைவிடம்:

புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் பனையப்பட்டி என்ற ஊர் உள்ளது. அங்கு இறங்கி 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால் ஆலயத்தை அடையலாம். பனையப்பட்டியில் இருந்து ஆட்டோ வசதியும் உண்டு..