Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Perumanamudaiya Mahadevar Temple - Thirunallur Perumanam

அருள்மிகு திருவெண்ணீற்று உமையம்மை சமேத பெருமணமுடைய மகாதேவர் சுவாமி திருக்கோவில் - திருநல்லூர்ப்பெருமணம்


Arulmigu Perumanamudaiya Mahadevar Temple - Thirunallur Perumanam !!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ பெருமணமுடைய மகாதேவர்

இறைவி :ஸ்ரீ திருவெண்ணீற்று உமையம்மை,

தல மரம் :

தீர்த்தம் : தீர்த்தம்

NagapatinamDistrict_perumanamudaiyaMahadevar_ThiruNallurPerumanam_shivanTemple


அருள்மிகு திருவெண்ணீற்று உமையம்மை சமேத பெருமணமுடைய மகாதேவர் சுவாமி திருக்கோவில் - திருநல்லூர்ப்பெருமணம்

திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு உமையம்மையே நேரில் வந்து திருநீறு அளித்ததால் அம்பிகைக்கு திருவெண்ணீற்று_உமையம்மை என்ற பெயர் ஏற்பட்டது. இறைவியின் சந்நிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசிகொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை. வருடம் தோறும் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சம்பந்தரின் திருமண திருவிழா நடக்கிறது.

தல சிறப்புகள்:

திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். கோவிலில் பெருஞ்சோதி தோன்றி ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில் முக்தி அடைந்த தலம் என்ற் பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.

இத்தகைய சிறப்பு மிக்க சம்பவம் நடைபெற்ற பெருமை உடைய சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயம். #ஜாதக_தோஷங்களால் திருமணத் தடை ஏற்படுவர்களுக்கு இந்த சுந்தர கோதண்டராமர் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி புனர்வசு நட்சத்திரத்தில் திருமஞ்சனம் செய்வித்தால் தடைகள் நீங்கி நல்லவரன் அமைந்து நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு திருவெண்ணீற்று உமையம்மை சமேத பெருமணமுடைய மகாதேவர் சுவாமி திருக்கோவில் -
- திருநல்லூர்ப்பெருமணம்
நாகை மாவட்டம் ,



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.



அமைவிடம்: