Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Somasunthareswarar Temple - Karuvazhakarai Village - Myladuthurai

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் சமேத சோமசுந்தரேசுவரர் ஆலயம். கருவாழக்கரை - மயிலாடுதுறை


Arulmigu Somasunthareswarar Temple - Karuvazhakarai Village - Myladuthurai !!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ சோமசுந்தரேசுவரர்

இறைவி :ஸ்ரீ மீனாட்சி அம்மன்

தல மரம் : மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

NagapatinamDistrict_SomasunthareswararTemple_Karuvazhakarai_Mayiladuthurai-shivanTemple


ருள்மிகு ஸ்ரீ சோமசுந்தரேசுவரர் ஆலயம். கருவாழக்கரை - மயிலாடுதுறை

கருவாழக்கரை திருக்கோயில்

மயிலாடுதுறை அருகே உள்ள கருவாழக்கரை என்ற கிராமத்தில் இருக்கிறது, அருள்மிகு சோமசுந்தரேசுவரர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர், சோமசுந்தரேசுவரர். இறைவியின் பெயர் மீனாட்சி அம்மன். இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

கருவறையில் இறைவன் சோமசுந்தரேசுவரர், லிங்கத்திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்தபடி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். பொதுவாக சிவாலயங்களில் இறைவியின் சன்னிதி மகாமண்டபத்தின் வலதுபுறம் தான் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் அன்னை மீனாட்சியின் சன்னிதி வடக்கு பிரகாரத்தில் தனிக் கோவிலாக அமைக்கப்பட்டி ருப்பது தனிச்சிறப்பாகும். இங்கு அன்னை நின்ற திருக்கோலத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இங்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் வலது கரத்தில் சக்கரத்தையும் இடது மேல் கரத்தில் வேலும் தாங்கியிருக் கிறாள். கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருளாசிபுரிகிறாள்.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ சோமசுந்தரேசுவரர் ஆலயம். ,
கருவாழக்கரை - மயிலாடுதுறை ,
நாகை மாவட்டம் ,



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இந்த ஆலயமானது தினமும் காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.



அமைவிடம்:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது கருவாழக்கரை திருத்தலம். .