Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Sagayeswarar Temple - Moovalur, Nagapatinam

அருள்மிகு சவுந்திர நாயகி யுடன், மங்களாம்பிகை சமேத மார்க்க சகாயேசுவரர் திருக்கோவில் -மூவலூர்


Arulmigu Sagayeswarar Temple - Moovalur, Nagapatinam!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் சுவாமி

இறைவி :ஸ்ரீ சவுந்திர நாயகி யுடன், மங்களாம்பிகை அம்மன்

தல மரம் : மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

NagapatinamDistrict_SagayeswararTemple_Moovalur_shivanTemple


ருள்மிகு சவுந்திர நாயகி யுடன், மங்களாம்பிகை சமேத மார்க்க சகாயேசுவரர் திருக்கோவில் -மூவலூர்

மார்க்க சகாயேசுவரர் திருக்கோவில் -மூவலூர்

திரிபுர சம்ஹாரத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் ஏற்பட்ட சாபத்தை நீக்கிய இறைவன் வாழும் ஆலயம், மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கையின் தோஷம் நீக்கிய தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்த, மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம். ஆதியில் இத்தலம் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இது புன்னாகவன ஷேத்திரம் என வழங்கப்பட்டது. இறைவன் ‘புன்னாகவனேசுவரர்’ என்று அழைக்கப்பட்டார். ருத்ரன், திருமால், பிரம்மா மூவருக்கும் இத்தலத்து இறைவன் வழிகாட்டி தன்னை வெளிப்படுத்தியதால், இறைவனுக்கு ‘வழிகாட்டிய வள்ளல்’ என்றும், ‘மார்க்க சகாயேசுவரர்’ என்றும் பெயர் வழங்கலானது. இதே போல் மூவரும் வழிபட்ட ஊர் இது என்பதால், ‘மூவரூர்’ என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது ‘மூவலூர்’ என்றாகிஇருக்கிறது.

தலபுராணம்

வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சனி என்ற மூன்று அசுரர்களும் முறையே பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கட்டி, தேவர்களையும் மக்களையும் வாட்டி வதைத்து வந்தனர். தன்னிடம் சரணாகதி அடைந்த தேவர்களையும் மக்களையும் காத்திட திருவுள்ளம் கொண்டார் ஈசன். அதைத் தொடர்ந்து பிரம்மா, திருமால், தேவர்கள் உள்ளிட் டோரைக் கொண்டு தேர் பூட்டி திருவதிகை நோக்கி புறப்பட்டார். அப்போது திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் உள்ளிட்டோர் ‘அசுரர்களை அழிக்கும் செயல் தங்கள் உதவியினாலேயே நடக்கிறது’ என்று எண்ணி கர்வம் கொண்டனர். இந்த கர்வத்தால் திருமால், பிரம்மா, தேவர்கள் அனைவருக்கும் சாபம் ஏற்பட்டது. மனம் வருந்திய திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் இறைவனிடம் சாப விமோசனம் வேண்டினர். அவரது ஆலோசனைப்படி காவிரி தென்கரையில் உள்ள புன்னாகவனேசுவரரைத் தேடி வந்தனர். இறைவனின் கருணையால் அங்கு சிவலிங்கம் வெளிப்பட்டது. அவரை வணங்கி வழிபட்டு தோஷம் நீங்கினர் என தலபுராணம் கூறுகிறது.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு சவுந்திர நாயகி யுடன், மங்களாம்பிகை சமேத மார்க்க சகாயேசுவரர் திருக்கோவில் ,
-மூவலூர்-
நாகை மாவட்டம் ,



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இக்கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்து இருக்கும்.

.



அமைவிடம்:

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மூவலூர் அமைந்துள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே 5 கி.மீ தூரத்தில், மயிலாடுதுறை ஜங்சன் இருக்கிறது. அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில், மூவலூர் அமைந்துள்ளது. மூவலூர் தேரடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகே ஆலயம் அமைந்துள்ளது..