Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Rishabapureeswarar Swamy Temple, Thirukundaiyur, Nagapatinam |

அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை அம்பிகா ஸமேத அருள்மிகு ஸ்ரீ ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில்- திருக்குண்டையூர்


அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை அம்பிகா ஸமேத அருள்மிகு ஸ்ரீ ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில்- திருக்குண்டையூர்



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ ரிஷபபுரீஸ்வரர் 

இறைவி :ஶ்ரீ மங்களாம்பிகை

தல மரம் : மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

NagapatinamDistrict_KaarkodakanathaSwamy_Kodankudi_shivanTemple


Arulmigu Rishabapureeswarar Swamy Temple, Thirukundaiyur, Nagapatinam | அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை அம்பிகா ஸமேத அருள்மிகு ஸ்ரீ ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில்- திருக்குண்டையூர் தல வரலாறு

இந்த இறைவனை பஞ்சம் போக்கும் ஈசன் என்று சிறப்பிக்கிறார்கள், பக்தர்கள். மேலும், இந்தத் திருக்கோயிலில், மதுரை மீனாட்சி உடனாகிய சொக்கநாதரும் குடிகொண் டிருப்பது விசேஷம்! இத்தலத்து ஈசனை நந்தி வழிபட்டு அருள்பெற்றார். கருவறைக்குச் செல்லும் முன், வலது புறத்தில் நான்கு கரங்களில் கனிகளையும் துதிக்கையில் மோதகமும் கொண்ட வலம்புரி விநாயகர் வீற்றிருக்கிறார். வரப்பிரசாதியானவர் இவர். அதேபோல் உள் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, கோஷ்ட விநாயகர், தென்முகக் கடவுள், லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை, சண்டிகேஸ்வரர், பைரவர், சந்திரன், சூரியன் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.

இத்தலத்தின் நாயகியாம் மங்களாம்பிகை, தன்னை வணங்குவோருக்கு சகல மங்கலங்களையும் வாரி வழங்கி வருகிறாள். பிறவிக் குருடராகிய அந்தணர் ஒருவர் தினமும் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடி, ரிஷபபுரீஸ்வரரை மனக்கண்ணால் தரிசித்து வழிபட்டு வந்தார். அதன் பலனாக பார்வை பெற்றார். எனவே, அந்தத் தீர்த்தத்தை கண்கொடுத்த பொற்றாமரைக் குளம் என்று சிறப்பிக்கிறார்கள்.

கோயிலுக்குத் தெற்கே, நாற்புறமும் பூதகணச் சிற்பங்களுடன் கூடிய மாசிமக நெல் மகோற்சவ நெல் மேடை அமைந்துள்ளது. இந்த மேடையில்தான் ஆண்டுதோறும் விவசாயிகள் நெல்லைக் காணிக்கையாக வழங்குவார்கள். காணிக்கை நெல்லை, பூதகணங்களாக வேடமிட்ட நால்வர் திருவாரூருக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள். மாதாந்திர விழாவாக சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், மங்களாம்பிகைக்கு பௌர்ணமி பூஜை மற்றும் பைரவருக்கு அஷ்டமி பூஜைகள் நடைபெறுகின்றன. இந்தத் தலத்து ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்; மனக்கவலைகள் தீரும். வீட்டில் உணவுப் பற்றாக்குறையே இருக்காது. மங்கலங்கள் பெருகும். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகி வருவாய் உயரும். இந்தத் தலத்துக்குச் சென்று வழிபடும் அன்பர்கள் அனைவரும், குண்டையூர்க்கிழாரைப் போன்றே இறைவனின் திருவருளுக்குப் பாத்திரமாவார்கள். இப்புவியில் பொன்னும் பொருளும் அடைந்து நிறைவாழ்வு பெறுவார்கள்.

இத்தலத்தின் தீர்த்தத்தில் நீராடி, இவ்வாலயத்தை வலம் வந்து வணங்கினால், மதுரைப் பொற்றாமரைக்குளத்தில் நீராடிய பலனையும், மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்ட புண்ணியத்தையும் அடையலாம். கண் குறைபாடுகள் அகலும். சகல நன்மைகளும் கைகூடும்'' என்றார் பரவசத்தோடு. இந்த இறைவனை பஞ்சம் போக்கும் ஈசன் என்று சிறப்பிக்கிறார்கள், பக்தர்கள். மேலும், இந்தத் திருக்கோயிலில், மதுரை மீனாட்சி உடனாகிய சொக்கநாதரும் குடிகொண் டிருப்பது விசேஷம்!







திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில்
திருக்குண்டையூர்
நாகை மாவட்டம்



ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:



ரிஷபபுரீஸ்வரர் ஆலயம் அமைவிடம்:

இத்தலம் திருவாரூரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து 28 கி.மீ தொலைவிலும் திருக்குவளையிலிருந்து அரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆட்டோ வசதியுண்டு.