Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Kaarkodakanatha Swamy Temple, Kodankudi, Nagapatinam

அருள்மிகு ஸ்ரீ கைவல்லி அம்பிகா ஸமேத அருள்மிகு ஸ்ரீ கார்கோடகநாதஸ்வாமி திருக்கோயில்- கோடங்குடி


அருள்மிகு ஸ்ரீ கைவல்லி அம்பிகா ஸமேத அருள்மிகு ஸ்ரீ கார்கோடகநாதஸ்வாமி திருக்கோயில்- கோடங்குடி



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ கார்கோடகநாதஸ்வாமி  

இறைவி :ஶ்ரீ கைவல்லி அம்பிகா

தல மரம் : மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

NagapatinamDistrict_KaarkodakanathaSwamy_Kodankudi_shivanTemple


Arulmigu Kaarkodakanatha Swamy Temple, Kodankudi, Nagapatinam | அருள்மிகு ஸ்ரீ கைவல்லி அம்பிகா ஸமேத அருள்மிகு ஸ்ரீ கார்கோடகநாதஸ்வாமி திருக்கோயில்- கோடங்குடி தல வரலாறு

ராமாயணம், மகாபாரதம் காலத்திற்கும் முற்பட்டது நளன் தமயந்தி சரித்திரம். நிடத நாட்டில் மாவிந்த நகரைத் தலைநகராகக் கொண்டு வீரசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவரது மகன் நளன். ஒருநாள் நளனின் பேரழகினைக் கண்ட அன்னப்பறவை ஒன்று, “மன்னா! உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டில் குண்டினபுரம் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வரும் வீமசேனன் எனும் மன்னனின் மகள் தமயந்திதான்” என்று கூறி அவளது குணநலன்களை சொன்னது.

அதைக் கேட்டு தமயந்தியின் மீது நளனுக்கு காதல் வந்தது. அவன் தன் காதலை கூறும்படி அன்னப்பறவையை தூது அனுப்பினான். அன்னமும் தமயந்தியிடம் சென்று, நளனின் ஆட்சித் திறத்தினையும், அறிவு மற்றும் நற்பண்புகளையும் கூறியது. அதைக் கேட்டு தமயந்திக்கும் நளனின் மீது காதல் உண்டானது.

இந்நிலையில் தமயந்திக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் நளன் உட்பட மண்ணுலக மன்னர்கள் பலரும், இந்திரன் உட்பட விண்ணுலக தேவர்கள் சிலரும் பங்கேற்றனர். தேவர்கள் நளன் மீது தமயந்தி கொண்டக் காதலை அறிந்து, அனைவரும் நளனின் உருவத்திலேயே சுயம்வரத்திற்கு வந்திருந்தனர். கையில் மணமாலையுடன் வந்த தமயந்தி ஒரு கனம் திகைத்துப் போனாள். ‘இவர்களில் உண்மையான நளனை எப்படிக் கண்டறிவது?’ என்று குழம்பிய தமயந்தி, ‘தேவர்களின் கண்கள் இமைக்காது; அவர்கள் சூடும் மாலை வாடாது’ என்பதனை அறிந்திருந்து வைத்திருந்தாள். அதன் மூலம் உண்மையான நளனைக் கண்டறிந்து மணமாலையை சூட்டினாள். அவர்கள் இல்லற வாழ்க்கையில் இரு குழந்தைகளும் பிறந்தனர்.

தமயந்தி, நளனை மணந்து கொண்டதால் கோபம்கொண்ட இந்திரனும் அவனுடன் வந்த தேவர்களும், சனி பகவானிடம் நளனைப் பிடித்து துன்புறுத்தும்படிக் கூறினர். சனி பகவான் ஏழரை ஆண்டுகள் நளனைப் பிடித்தார். இதனால் புஷ்கரனோடு சூதாடி நளன் தன் அரசாட்சியை இழந்தான். மனைவியோடு காட்டில் வாழ்ந்தான். அப்போது மனைவியையும் இழந்தான். கணவனைக் காணாததால் தமயந்தி தந்தையோடு சென்று வசித்தாள்.ஒருநாள் கார்கோடகன் பாம்பு, தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக்கொண்டது. அப்போது அந்த வழியாக சூதாட்டத்தில் நாட்டையும், சொத்தையும் இழந்த நள மகாராஜா சோகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். கார்கோடகன் பாம்பு தீயில் மாட்டிக்கொண்டதை பார்த்த நள மகாராஜா, அந்த கார்கோடகன் பாம்பை உயிருடன் மீட்டார்.

தன்னை காப்பாற்றியதற்கு பிராயச்சித்த மாக கார்கோடகன் பாம்பு, நளமகா ராஜாவை தீண்டி உருமாற்றியது. இதனால் நளமகாராஜா நாட்டு மக்களின் கண்களுக்கு தெரியாதவராக உருமாறினார். நளமகாராஜா உருமாறியதால், அவரது மனைவி தமயந்திக்கு கூட நளமகாராஜாவின் உருவம் தெரியவில்லை. இதனால் நளமகாராஜா, நாட்டை இழந்து விட்டு எங்கோ சென்று விட்டார் என்று கருதிய நளமகாராஜாவின் மாமா வீமராஜா, தனது மகள் தமயந்திக்கு இரண்டாவது சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்தார். அந்த சமயத்தில், தேர் ஓட்டுவதில் மிகுந்த திறமை படைத்த நளமகாராஜா, வீமராஜாவிடம் தேரோட்டியாக வேலைக்கு சேர்ந்தார். நளன், வீமராஜாவிற்கு தேர் ஓட்டுவதை பார்த்த தமயந்தி, உருவில் நளனை தெரியாவிட்டாலும் அவன் தேர் ஓட்டும் விதத்தை பார்த்து அவன் தான் (நளனை) தனது கணவன் என்று தெரிந்து கொண்டாள். பின்னர் நளனும், தமயந்தியும் ஒருவரையொருவர் பார்த்து சம்பாஷனை செய்து கொண்டனர். இதையறிந்த வீமராஜா நளனுக்கும், தமயந்திக்கும் திருமணம் செய்து வைத்தார். நளன், ஏழரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜாவாக பட்டம் சூட்டிக்கொண்ட பின்னர் கார்கோடகன் பாம்பு மீண்டும் நளனை தீண்டி பழைய உருவத்திற்கு மாற்றியது. நளனை தீண்டிய செயலுக்காக கார்கோடகன் பாம்பு பாப விமோசனம் பெற மஹாவிஷ்ணுவை நோக்கி தியானம் செய்தது. அப்போது கார்கோட கனின் முன் மகாவிஷ்ணு தோன்றி, கோடங்குடி சென்று வழிபட்டு வா. அங்கு உனக்கு முக்தி கிடைக்கும்’ என்று கூறினார்.அதன்படி கார்கோடகன் பாம்பு கோடங்குடிக்கு வந்து அங்குள்ள ஈசனை வழிபட்டு தவம் செய்தது. இதையடுத்து கார்கோடகனுக்கு முக்தி கிடைத்தது. அன்று முதல் இந்த ஊர் கார்கோடகன்குடி என்றும் கார்கோடக ஷேத்திரம் என்றும் அழைக்கப்பட்டது.

பின்னர் பரத்வாஜ முனிவரின் வழிகாட்டுதல்படி, தர்ப்பை புற்கள் நிறைந்த வனமான திருநள்ளாறு திருத்தலம் வந்து, தீர்த்தம் உண்டாக்கி நீராடினார். அங்கு சுயம்புவாக தோன்றிய தர்ப்பை புற்கள் படிந்த தழும்புடன் கூடிய தர்ப்பாரண்யேஸ்வரர் லிங்கத்திற்கு மலர்கள் சூட்டி வழிபாடு செய்தான். இதையடுத்து அவனைப் பிடித்திருந்த ஏழரைச் சனி முற்றிலுமாக நீங்கியது. இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்று, நல்ல முறையில் அரசாட்சியை தொடர்ந்தான்





திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ கார்கோடகநாதஸ்வாமி திருக்கோயில்
கோடங்குடி
நாகை மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:



அமைவிடம்: