Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Iravatheeswarar Temple - Melaththirumanancherry, Nagapatinam

அருள்மிகு மலர்குழல் நாயகி சமேத ஐராவதீஸ்வரர் திருக்கோவில் - மேலைத் திருமணஞ்சேரி


Arulmigu Iravatheeswarar Temple - Melaththirumanancherry, Nagapatinam!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ ஐராவதீஸ்வரர்

இறைவி :ஸ்ரீ மலர்குழல் நாயகி அம்மன்

தல மரம் : மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

NagapatinamDistrict_IravatheeswararTemple_Melathirumanancherry_shivanTemple


ருள்மிகு மலர்குழல் நாயகி சமேத ஐராவதீஸ்வரர் திருக்கோவில் - மேலைத் திருமணஞ்சேரி

ஐராவதீஸ்வரர் திருக்கோவில்

திருமணஞ்சேரியில் பார்வதியை மணம் புரிய வந்த மாப்பிள்ளை சிவபெருமானை, எதிர் கொண்டு அழைத்த தலம், இந்திரன் மற்றும் ஐராவதம் பெற்ற சாபத்தை நீக்கிய திருக்கோவில், பெண்களுக்கு நல்ல வரன் அமைய உதவும் தலம், மணமக்களின் பிணக்கு தீர்க்கும் திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, எதிர்கொள்பாடி என்னும் மேலைத் திருமணஞ்சேரி திருத்தலம்.

தலபுராணம்

இந்த ஆலயத்தின் புராண வரலாறு, இத்தலத்தைச் சுற்றியுள்ள தலங்களையொட்டி அமைந்துள்ளது. சிவபெருமானின் சாபத்தால் பசுவாக மாறிய அன்னை பார்வதி, தேரழுந்தூரில் ஈசனை வழிபட்டாள். பிறகு திருக்கோழம்பத்திற்கு வந்து வழிபாடு செய்தாள். அப்போது பசுவின் குளம்படி சிவலிங்கத் திருமேனியில் பட்டு வடு ஏற்பட்டது. தொடர்ந்து திருவாடுதுறையில் அன்னையின் சாபம் நீங்கியது. இதையடுத்து அத்தலத்திலேயே பரத்வாஜ முனிவர் நடத்திய யாகத்தில் குழந்தையாக தோன்றி அன்னை வளர்ந்து வந்தாள். அன்னையானவள் பருவம் அடைந்ததும், திருமணஞ் சேரியில் திருமணம் புரிய வந்த மாப்பிள்ளை சிவபெருமானை, மாமனாரான பரத்வாஜ மகரிஷி எதிர்கொண்டு வரவேற்ற தலம், எதிர்கொள்பாடி என்று பெயர்பெற்றது. திருமண வேள்வி நிகழ்ந்த தலம் திருவேள்விக்குடி. திருமணம் நடந்த தலம் திருமணஞ்சேரி என புராணம் கூறுகிறது. .

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு மலர்குழல் நாயகி சமேத ஐராவதீஸ்வரர் திருக்கோவில் - ,
மேலைத் திருமணஞ்சேரி
நாகை மாவட்டம் ,



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இக்கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்து இருக்கும்.



அமைவிடம்:

.