Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Abirameswarar Temple - Kancheepuram

அருள்மிகு ஸ்ரீ முத்தாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ அபிராமேஸ்வரர் திருக்கோயில் - காஞ்சிபுரம்


Arulmigu Abirameswarar Temple - Kancheepuram !!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ அபிராமேஸ்வரர்

இறைவி :ஸ்ரீ முத்தாம்பிகை அம்மன்

தல மரம் : மரம்

தீர்த்தம் :

KancheepuramDistrict_AbirameswararTemple_Kanchipuram-shivanTemple


ருள்மிகு ஸ்ரீ அபிராமேஸ்வரர் திருக்கோயில் - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில்அபிராமேசம்என்று வழங்கப்படுகிறது. , காஞ்சிபுரத்திலுள்ள சிவத்தலங்களில் ஒன்று., மூலஸ்த்தானத்தில் சிவலிங்க வடிவாக அருள்புரியும் சுயம்பு லிங்க மூர்த்தமாக சிறு திருமேனியராக அழகுறக் காட்சிதரும் அபிராமேசுவரர் எழுந்தருளியுள்ளார், முகப்பில் கணபதியும், வள்ளி-தெய்வானை உடன் முருகனும் எழுந்தருளியுள்ளனர்.

அருள்மிகு ஸ்ரீ அபிராமேசுவரர் திருக்கோயில் - தல வரலாறு.

மாவலி சக்கரவர்த்தியின் கொட்டத்தை அடக்கவும், தேவர்களின் குறைகளை தீர்க்க ஸ்ரீமன் நாராயணன் வாமன வடிவமாக காஞ்சிபுரத்திற்கு வருகைபுரிந்து,இச் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து "அபிராமம்" எனும் திருநாமம் சூட்டி வழிப்பட்டார். பின்னர்மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு அவன் வலிமை அழித்து பாதாளத்தில் அழுத்தியதாலும், தானம் நருவதைத்தடுக்க வந்த சுக்கிரனின் கண்பார்வையை பறித்ததால் மீண்டும் காஞ்சிக்கு வந்து, "வாமன குண்டம்" எனும் தீர்த்தம் அமைத்து அபிராமேசுவரரை பூஜித்து. வழிபட்டார். உலகளந்த கோலத்தை மகிழ்ச்சியுடன் காட்டி, வணங்கிச் சென்றார் என்பது தலவரலாறாகும்.

"அபிராமேசம்" என்பதில் விளங்குவது, திருமால் இந்திரனுக்கு அருள காசிபரின் புதல்வரான வாமனராகத் தோன்றி அபிராமேசரை பிரதிஷ்டை செய்து போற்றி ஈசனின் அருளைப்பெற்று மாவலி என்னும் அசுரர் தலைவனின் வேள்விச் சாலையை அடுத்து மூன்றடி நிலம் அவனிடம் இரந்துபெற தடுத்த சுக்கிரன் கண்ணைக் கெடுத்தார்.. பின்பு, மாவலி அரசிற்குட்பட்ட விண்ணையும் மண்ணையும் ஈரடியாகவும் மூன்றாவதுஅடிக்கு மாவலியின் தலையில் வைத்து அவனைப் பாதாளத்தழுத்தித் இந்திரன் துயரைத் தீர்த்தார். மீண்டு வந்த திருமால் ‘வாமன குண்டம்’ என்னும் தீர்த்தம் தொட்டு நீராடி அபிராமேசரை வணங்கி உலகளந்த பேருருவை காட்டி அருள்பெற்று ‘உலகளந்தபெருமாள்’ என்னும் திருநாமம் பெற்றார். ‘அபிராமேசர்’ உலகளந்தார் வீதியில் சங்குபாணி விநாயகர்க்கு வலப்புறத்தே கிழக்கு நோக்கியருள்கிறார்

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ அபிராமேஸ்வரர் திருக்கோயில் - காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் ,
(காஞ்சி) | காஞ்சிபுரம் ,
காஞ்சிபுரம் மாவட்டம். ,



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.



அமைவிடம்:

காஞ்சிபுரம் நடுப்பகுதியில் (பெரிய காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் தெருவில், சங்குபாணி விநாயகர் கோயிலுக்கு அருகே உள்ளது. .