Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu sri Uthira Vaithiyalingeshwarar Temple, Kattur, Chengalpattu

அருள்மிகு ஸ்ரீ தையல் நாயகி அம்பிகை உடனுரை அருள்மிகு ஸ்ரீ உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் ,காட்டுர் , செங்கல்பட்டு


Arulmigu sri Uthira Vaithiyalingeshwarar Temple, Kattur, Chengalpattu!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ உத்திர வைத்தியலிங்கேஸ்வரர்  

இறைவி :அருள்மிகு தையல் நாயகி அம்பிகை

தல மரம் : மரம்

தீர்த்தம் :அகத்தியர் தீர்த்தம்

ChengalpattuDistrict_Uthira Vaithiyalingeshwarar Temple_kaatur_shivanTemple


அருள்மிகு ஸ்ரீ உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில் ,காட்டுர் , செங்கல்பட்டு,தல வரலாறு.

செவ்வாய் பரிகார ஸ்தலம்

இது செவ்வை பரிகார ஸ்தலம் மற்றும் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சமமாக கருதப்படுகிறது. உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருமணத்தில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்குவார். மேலும் இது ஒரு அங்கராகா தோஷா நிவர்த்தி ஸ்தலமாகும்.

தொண்டை மண்டலத்தின் அந்த வனப்பகுதியில், தவம் புரிவதற்காக வந்த அகத்தியர், அந்த இடத்தில் சிறிதளவும் தண்ணீர் இல்லாமல் இருந்ததை அறிந்தார். நித்தியப்படி பூஜைகளுக்காகவும் இந்த வழியே வருவோரின் தாகம் தணிப்பதற்காகவும் தண்ணீர் வேண்டி, சிவனாரைத் தொழுது முறையிட்டார்.அவரின் கோரிக்கையை ஏற்ற சிவனார், அந்தத் திருவிடத்தில் தீர்த்தக் குளத்தை உருவாக்கியதுடன் அப்படி உருவாக்கிய அகத்தியர் தீர்த்தத்திலிருந்து நீர் கொண்டு வந்து என் திருமேனிக்கு அபிஷேகம் செய்து அந்த நீரை இவ்வூர் மக்களின் பிணி தீர்க்கும் மருந்தாக கொடு என்று சொல்லி மறைந்தார். திருமணக் கோலத்திலும் அகத்தியருக்கு காட்சி தந்தருளினார். இப்படி, திருக்காட்சி அருளியதாலும் வனமாகத் திகழ்ந்ததாலும் அந்தப் பகுதி காட்டூர் என்றானதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர திருக்கோயில் ,
காட்டுர் .
செங்கல்பட்டு வட்டம்,
செங்கல்பட்டு மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 8.00 மணி வரை திறந்திருக்கும்.



அமைவிடம்:

காயார் வழியாக மாம்பாக்கம் செல்லும் சாலையில் 17km தொலைவில் உள்ளது காட்டுர் அருள்மிகு உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில்