Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu sri Kaalanandeswarar temple, Naavalur,Thirukalukundram, Chengalpattu

அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பாள் உடனுரை அருள்மிகு ஸ்ரீ காலகண்டீஸ்வரர் திருக்கோயில் நாவலூர்,திருக்கழுக்குன்றம் , செங்கல்பட்டு


Arulmigu sri Kaalanandeswarar temple, Naavalur,Thirukalukundram, Chengalpattu!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ காலகண்டீஸ்வரர் திருக்கோயில்  

இறைவி :அருள்மிகு கற்பகாம்பாள்

தல மரம் : வன்னி மரம்

தீர்த்தம் : தீர்த்தம்

ChengalpattuDistrict_Thirukalukundram_Kaalakandeswarar_Temple


அருள்மிகு ஸ்ரீ காலகண்டீஸ்வரர் திருக்கோயில் நாவலூர்,திருக்கழுக்குன்றம் , செங்கல்பட்டு,தல வரலாறு.

காமதேனு பூஜித்த ஸ்தலம்

தல வரலாறு.:

நால்வர் பெருமக்களால் பாடல் பெற்றதும், நான்கு யூகங்களாய் கழுகு முனிவர்களால் வணங்க பெற்றதுமான ஸ்தலம். திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருத்தலத்தின் ஆதியில் காமதேனு ரிஷியால் ஏற்பட்ட சாபம் நீங்க வேதகிரீஸ்வர பெருமானை கண்டு சாபம் நிவர்த்தி பெற்றபின் வேதகிரீஸ்வரர் திருமலையின் தென்மேற்கு திசையில் சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜித்த ஸ்தலம்.இத்தலத்து இறைவனை காலகண்டேஸ்வரர் என்றும் இறைவி கற்பகாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் ஸ்தலமரம் வன்னி, மிகவும் தொன்மை வாய்ந்த இந்த ஸ்தலத்து இறைவனை வழிபட்டால் எல்லா மங்களங்களும் வாழ்வில் நிகழும். இங்கு கோ தானம் செய்தால் செய்த பாவத்திலிருந்து விடுபடலாம். இத்தலத்து இறைவன் 8 பட்டை வடிவம் கொண்ட மங்கள மூர்த்தியாக அருள்புரிகிறார்..

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு காலகண்டீஸ்வரர் திருக்கோயில்,
கருங்குழி சாலை,
நாவலூர்,
திருக்கழுக்குன்றம்,
திருக்கழுக்குன்றம் வட்டம்,
செங்கல்பட்டு மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் 7மணி வரை திறந்திருக்கும்.



அமைவிடம்:

திருக்கழுக்குன்றத்திலிருந்து கருங்குழி செல்லும் சாலையில் திருக்கழுக்குன்றத்திலிருந்து 2 தொலைவில் இத்திருக்கோவில் அமைந்து உள்ளது.