Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu sri Marundeeswarar Temple, Thirukachur, Chengalpattu

அருள்மிகு ஸ்ரீ இருள்நீக்கியம்பாள் அம்பிகை உடனுரை அருள்மிகு ஸ்ரீ மருந்தீஸ்வரர் திருக்கோயில் ,திருக்கச்சூர் , செங்கல்பட்டு


Arulmigu sri Marundeeswarar Temple, Thirukachur, Chengalpattu!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ மருந்தீஸ்வரர்  

இறைவி :அருள்மிகு இருள்நீக்கியம்பாள்

தல மரம் :கல்லால மரம்

தீர்த்தம் :கூர்ம (ஆமை) தீர்த்தம்

ChengalpattuDistrict_Kachabeswarar Temple_Thirukachur_shivanTemple


அருள்மிகு ஸ்ரீ மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருக்கச்சூர் , செங்கல்பட்டு,தல வரலாறு.

மருந்தீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு ஒருசமயம் இந்திரன், தான் பெற்ற சாபத்தின் பலனால் நோய் உண்டாகி அவதிப்பட்டான். தேவலோக மருத்துவர்களான அசுவினி தேவர்கள் அவனுக்கு எவ்வளவோ மருத்துவம் செய்தும் நோயை குணப்படுத்த முடியவில்லை. எனவே நோயை குணப்படுத்தும் மூலிகையைத்தேடி தேவர்கள் பூலோகம் வந்தனர். பல இடங்களில் தேடியும் மருந்து கிடைக்கவில்லை. அவர்கள் நாரதரிடம் ஆலோசனை கேட்க, அவர் மருந்துமலை எனும் இம்மலையில் குடி கொண்டிருக்கும் சிவனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால் அவர்கள் அருளால் மருந்து கிடைக்கும் என்று கூறினார். அதன்படி இங்கு வந்த அசுவினி தேவர்கள் சுவாமியை வழிபட்டனர். அவர்களுக்கு இரங்கிய சிவன் மருந்து இருக்கும் இடத்தை காட்டி அருள்புரிந்தார். தேவர்கள் பலா, அதிபலா எனும் இரண்டு மூலிகைகளை எடுத்துக் கொண்டு தேவலோகம் சென்று இந்திரனின் நோயை குணப்படுத்தினர். இந்திரனுக்கு மருந்து கொடுத்தவர் என்பதால் சிவனுக்கு மருந்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

மருந்தீஸ்வரர் திருக்கோயில் அம்மனின் திருநாமம் இருள்நீக்கிய அம்பாள்.சிவன், அசுவினி தேவர்களிடம் மருந்து இருந்த இடத்தை காட்டிய போதிலும், அவர்களால் எது சரியான மருந்து என கண்டுபிடிக்க முடியவில்லை. குழப்பத்தில் தவித்த அவர்களின் மனநிலையை கண்டு இரக்கம் கொண்ட அம்பாள், மூலிகையின் மீது ஒளியை பரப்பி அதனை சூழ்ந்திருந்த இருளை அகற்றி அருள்புரிந்தாள். இதனால் அம்பாளை இருள்நீக்கியம்பாள் என்றழைக்கின்றனர்.





திருக்கோயில் முகவரி :

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் ,
திருக்கச்சூர்
செங்கல்பட்டு மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:

மருந்தீஸ்வரர் திருக்கோயில் காலை 7 - 9 மணி வரை மட்டும் திறந்து இருக்கும்.



அமைவிடம்:

சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது.