Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu sri Mallikeswarar Temple, Mamallapuram, Chengalpattu

அருள்மிகு ஸ்ரீ மல்லிகேஸ்வரி அம்பிகை உடனுரை அருள்மிகு ஸ்ரீ மல்லிகேஸ்வரர் திருக்கோயில் ,மாமல்லபுரம் , செங்கல்பட்டு


Arulmigu sri Mallikeswarar Temple, Mamallapuram, Chengalpattu!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ மல்லிகேஸ்வரர்  

இறைவி :அருள்மிகு மல்லிகேஸ்வரி

தல மரம் : மல்லிகை

தீர்த்தம் :தீர்த்தம்

ChengalpattuDistrict_Mallikeswarar Temple_Mamallapuramu_shivanTemple


அருள்மிகு ஸ்ரீ மல்லிகேஸ்வரர் திருக்கோயில் ,மாமல்லபுரம்., செங்கல்பட்டு,தல வரலாறு.

7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள், மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாக கொண்டு ஆட்சி செய்தனர். அப்போது பல்லவ மன்னனின் அரசவையில் அமைச்சராக இருந்த பரஞ்ஜோதி என்பவர், இக்கோவிலை கட்டி ஒரு காலை பூஜை நடத்தி வந்ததாக கல்வெட்டுகளில் கூறப்படுகிறது. பல்லவர்கள் சாளுக்கியர்களுடன் போர் புரிந்தபோது, அமைச்சர் பரஞ்ஜோதி இந்த கோவிலில் தங்கள் மன்னன் நரசிம்மவர்ம பல்லவனுக்கு போரில் வெற்றி கிட்டவேண்டும் என்று சிறப்பு யாகம், பூஜை செய்து வழிபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் போர் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, காலை வேலையில் சிவலிங்கம் முன்பு பரஞ்சோதி தீவிர வழிபாட்டில் இருந்தாராம். அப்போது அவர் எதிரில் ஒரு நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியதாம். திடீரென அந்த பாம்பு மாயமாய் மறைந்ததாம். அன்று இரவு பரஞ்ஜோதியின் கனவில் சிவபெருமான் தோன்றி, ‘பக்தனே! நான்தான் சர்ப்பம் வடிவில் உன் முன் தோன்றினேன். சாளுக்கியர்களுடன் போரிடும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்’ என்றும், ‘நான் என்றும் உங்களுக்கு துணை நிற்பேன்’ என்றும் அருளாசி வழங்கியதாகவும் கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.





திருக்கோயில் முகவரி :

அருள்மிகு மல்லிகேஸ்வரர் திருக்கோயில் ,
மாமல்லபுரம்.
செங்கல்பட்டு வட்டம்,
செங்கல்பட்டு மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 மணியிலிருந்து 11 மணி வரையிலும், மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரையிலும் திறந்து இருக்கும்.



அமைவிடம்: