Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu sri Kaaliswarar temple, Seetanancherry, Chengalpattu

அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுரை அருள்மிகு ஸ்ரீ காலீஸ்வரர் திருக்கோயில் ,சீட்டனஞ்சேரி , செங்கல்பட்டு


Arulmigu sri Kaaliswarar temple, Seetanancherry, Chengalpattu!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ காலீஸ்வரர்  

இறைவி :அருள்மிகு சிவகாம சுந்தரி

தல மரம் :மணிப்புங்க மரம்

தீர்த்தம் :குமார தீர்த்தம்

ChengalpattuDistrict_Kaleeswarar Temple_Seettancherry_shivanTemple


அருள்மிகு ஸ்ரீ காலீஸ்வரர் திருக்கோயில் ,சீட்டனஞ்சேரி , செங்கல்பட்டு,தல வரலாறு.

,தல வரலாறு.

காஞ்சி மாநகரின் கிழக்கே 25km தொலைவில் பாலாற்றங்கரையின் தென்புறம் அமைந்துள்ளது இத்திருத்தலம்.

இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் காளீஸ்வரர், மகிழ வனத்தின் மணிப்புங்க மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளினார்.பரத்வாஜ முனிவரால் பூசிக்க பெற்று கைலாய மோட்சமடைய அருளியவர். பாண்டவர்கள் வியாச முனிவரின் உபதேசம் பெற்று மகிழ வனத்தை அடைந்து இந்த இறைவனை வணங்கி முன்வினை பாவங்களை நீங்க பெற்றதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சிவபெருமான் கட்டளைக்கு கீழ்ப்படிந்து குமரக்கடவுள் குமார தீர்த்தம் என்னும் குளத்தை உருவாக்கி அத்தீர்த்தத்தின் மூலம் சுயம்பு மூர்த்தியை அபிஷேகம் செய்து சூரனை வதைத்த வானம் நீங்க பெற்றார். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிராம்பு, மிளகு, ஏலக்காய் பொருள்களை வியாபாரம் செய்யும் பெரி செட்டியார்களில் ஒருவரும் சிறந்த சிவபக்தரும் ஆனா ஒருவர் இந்த சிவ லிங்கத்திற்கு தினமும் வந்து பூஜை செய்துவிட்டு அருகில் இருந்த தல விருட்சமான மணிப்புங்க மரத்தின் கீழ் இளைப்பாறும் சமயத்தில் பசுக்கூட்டங்கள் வந்து தானாக அங்கு வந்து லிங்கத்தின் மீது பால் சொரிவதை கண்டுள்ளார். பிறகு மரத்தின் கீழ் அவ்வியாபாரி உறங்கு சமயத்தில் அவரின் கனவில் தோன்றிய ஈசன் வியாபாரியின் தொழிலுக்கு பெருக்கியதால் அதிக பொற்காசுகள் செல்வமும் குவிந்தன.சிவபக்தரான அந்த வியாபாரி தன் ஈட்டிய பெருந் செல்வத்தினை கொண்டு கரும் பாறைகளை கொண்டு கருங்கற் பாறைகளை கொண்டு இத்திருக்கோவில் கட்டப்பட்டதாக தெரிகிறது.

திருக்கோயில் முகவரி :

அருள்மிகு காலீஸ்வரர் திருக்கோயில் ,
சீட்டனஞ்சேரி
செங்கல்பட்டு மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை திறந்திருக்கும்.



அமைவிடம்: