Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu sri Kachabeswarar Temple, Thirukachur, Chengalpattu

அருள்மிகு ஸ்ரீ அஞ்சனாட்சியம்மை அம்பிகை உடனுரை அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோயில் ,திருக்கச்சூர் , செங்கல்பட்டு


Arulmigu sri Kachabeswarar Temple, Thirukachur, Chengalpattu!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ கச்சபேசர், விருந்திட்டவரதர்  

இறைவி :அருள்மிகு அஞ்சனாட்சியம்மை

தல மரம் :கல்லால மரம்

தீர்த்தம் :கூர்ம (ஆமை) தீர்த்தம்

ChengalpattuDistrict_Kachabeswarar Temple_Thirukachur_shivanTemple


அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோயில் திருக்கச்சூர் , செங்கல்பட்டு,தல வரலாறு.

சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமை திருக்கச்சூருக்கு உண்டு.அதனால் விருந்திட்ட ஈஸ்வரர் என்ற பெயரும் மூலவருக்கு உண்டு.

இரண்டு கோயில்கள் இங்கு உள்ளது, மலையடிவாரத்தில் உள்ள கோயில் திருக்கச்சூர் ஆலக்கோயில் (கச்சபேஸ்வரர்) என்று அழைக்கப்படுகிறது. மலைமேல் உள்ள கோயிலின் பெயர் மருந்தீஸ்வரர் (ஒளஷதஈஸ்வரர் ) கோயில். சுந்தர மூர்த்தி நாயனார் பசித்திருந்த சமயம் இத்தல இறைவனார் பிச்சையேற்று உணவு கொணர்ந்து தமது அடியாரின் பசியாற்றிய தலம். இத்தலத்தில் கொடி மரத்தின் கீழுள்ள திருமண் திருநீற்றுத் தன்மையுடன் உள்ளது.

அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது.





திருக்கோயில் முகவரி :

அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் ,
திருக்கச்சூர்
செங்கல்பட்டு மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:

.காலை 8 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்து இருக்கும்.



அமைவிடம்:

சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது.