அருள்மிகு ஆதி அத்தி வரதர் திருக்கோவில் காஞ்சிபுரம்

ருள்மிகு ஸ்ரீ ஆதி அத்தி வரதர் - காஞ்சிபுரம்


காஞ்சிபுரம் அத்தி வரதரின் வரலாறு:

ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சியில் இருக்கின்ற புகழ் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று தான் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில். புராணங்களின் படி பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டவர் அத்திவரதர். அவர்தான்திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் தருகிறார்.

தற்போதைய காஞ்சிபுரம் என்றழைக்கப்படும் அத்திவனத்தில் அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தார் பிரம்மதேவன். அந்த யாகத்திற்கு தன் மனைவியாகிய சரஸ்வதியை அழைக்கவில்லை பிரம்ம தேவர். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, யாகத்தை தடை செய்ய அசுரர்களின் உதவியோடு வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள். இந்நிலையில், யாகத்தை காப்பதற்காக யாகத்தீயில் இருந்து திருமாள் தோன்றி வேகவதி நதிக்கு நடுவே சயனக்கோலம் பூண்டார். இதனால் வெட்கிய சரஸ்வதி, தன் பாதையை மாற்றிக்கொண்டாள். பிறகு காயத்ரி, சாவித்ரிஏ துணையுடன் பிரம்ம தேவன் தன் யாகத்தை முடித்தார் என்கிறது புராணம். யாகத்தீயிலிருந்து எழுந்தருளியதால் திருமாலின் தேகம் உஷ்ணத்தால் பால்படுத்தபட்டுவிட்டது. இதனால் தன்னை ஆனந்த தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்தில் உள்ள சிலையை பிரதிர்ஷ்டை செய்யுமாறு திருமால் அசரீரி மூலம் கூறியருளினார்.

அத்திமரத்தில் பெருமாள்

தன் யாகத்தை காத்தருளிய பெருமாளின் திருவடிவத்தை தேவலோக சிற்பி விஸ்வகர்மாவைக்கொண்டு அத்திமரத்தில் வடிவமைத்தார் பிரம்ம தேவர். இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார். வேள்வித்தீ வெப்பத்தை குளிர்விப்பதற்காக அனந்த புஸ்கர தீர்த்தத்தில் புகுந்த திருமாள் 40 வருடங்களுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஐதீகம் பின்பற்றப்படுகிறது.

மேலும் தென்னகத்தின் மீது இஸ்லாமிய படையெடுப்பு நடைபெற்ற காலத்தில் அத்தி வரதர் சிலை குளத்தில் போட்டு மறைக்கப்பட்டதாகவும், 40 ஆண்டு கால இடைவெளி காலத்தில் குளத்திலிருந்து அத்திவரதர் சிலை கிடைத்ததால் அத்தி வரதருக்கு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்து மீண்டும் குளத்தில் போட்டு ஒவ்வொரு 40 வருடம் கழித்தும் குளத்திலிருந்து வெளியே எடுத்து சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்யும் வைபவத்தை பின்பற்றத் தொடங்கினர். கடந்த நூற்றாண்டில் 1939 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் அத்திவரதர் சிலை குளத்திலிருந்து வெளியில் எடுத்து பூஜைகள் செய்யப்பட்டன.

அந்த வகையில் 1979 ஆம் ஆண்டிற்கு பிறகு 40 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்பு கடந்த ஜூன் 28-ஆம் தேதி அத்திவரதர் குளத்தில் இருந்து வெளியே எடுக்கும் வைபவம் நடைபெற்றது. ஜூலை மாதம் 1 தேதி முதல் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் திருமேனிக்கு தினமும் நித்ய பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படவுள்ளது. 48 நாட்களுக்கு பிறகு விடையார்த்தி பூஜைகள் செய்யப்பட்டு அத்தி வரதர் மீண்டும் கோயில் குளத்தில் இறக்கப்படுவார். இதன் பிறகு 2059 மற்றும் 2099 ஆம் ஆண்டுகளில் மட்டுமே இந்த நூற்றாண்டில் காஞ்சி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்.!+91-9629073538

+91-9894975977

www.thirukalukundram.in@gmail.com

Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website of Arulmigu Sri Aathi Athi Varathar Temple , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees