அருள்மிகு ஸ்ரீ மங்கள நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ வாஞ்சிநாத ஸ்வாமி திருக்கோயில் திருவாஞ்சியம், திருவாரூர்

ருள்மிகு ஸ்ரீ மங்கள நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ வாஞ்சிநாத ஸ்வாமி திருக்கோயில் திருவாஞ்சியம், திருவாரூர்
Arulmigu Vaanjinatha Swamy Temple - Thiruvaanjiyam Thiruvaarur!!

இறைவர் : ஸ்ரீ பவாஞ்சிநாத ஸ்வாமி  

இறைவி : ஸ்ரீ மங்கள நாயகி அம்பாள்

தல மரம் :மரம்

தீர்த்தம் : காசிப தீர்த்தம்ருள்மிகு ஸ்ரீ மங்கள நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ வாஞ்சிநாத ஸ்வாமி திருக்கோயில் திருவாஞ்சியம், திருவாரூர்

எமன் வழிபட்ட தலம். :

திருமால் சிவபெருமானை வழிபட்டு, இலக்குமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்ற தலம். (திருவை வாஞ்சித்த தலம் - திருவாஞ்சியம்) எமன் வழிபட்ட தலம். இங்கு எமனுக்குத் தனிக்கோயிலுள்ளது. இத்தலத்தில் இறப்பவர்க்கு எமவாதனையில்லை. கோயிலுள் எமவாகனமும் உள்ளது.இங்குள்ள துர்க்கை சந்நிதி விசேஷமானது. இத்திருக்கோயிலில் உள்ள நந்திதேவர் ‘கருவறுத்தவர்’என்றழைக்கப்படுகிறார். மாசி மகப்பெருவிழா விழா சிறப்பானவை. எமன், உலக உயிர்களைக் கொல்லும் பாவம் தீர, இங்கு இறைவனை வழிபட்டு இறைவனுக்கு வாகனமாகும் தன்மையைப் பெற்றான். ஆதலின், எமனுக்குக் காட்சி தரும் ஐதீகவிழா மாசிமகப் பெருவிழாவில் இரண்டாம் நாள் விழாவாக நடைபெறுகிறது.
திருக்கோயில் திறக்கும் நேரம்:

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.அமைவிடம்:Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees