அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில் - ஆடையூர் !

ருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில் - ஆடையூர்
Arulmigu Agastheeswarar Swamy Temple - Aadaiur!!

இறைவர் : ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி 

இறைவி : ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி அம்பாள்

தல மரம் : மரம்

தீர்த்தம் :ருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோவில் - ஆடையூர்

பத்து விரல்கள் வடுக்களாக அமைந்த அதிசய லிங்கத் திருமேனி கொண்ட இறைவன், பல மன்னர்கள் திருப்பணி செய்த ஆலயம், மூலிகை நீரால் இரு வேளை அபிஷேகம் நடக்கும் கோவில், மணப்பேறு மற்றும் மகப்பேறும் தரும் திருத்தலம், நோய் தீர்க்கும் அபிஷேக நீர் உள்ள ஆலயம், கள்வனுக்கும் அருள் செய்த கருணை தெய்வம் வீற்றிருக்கும் திருக்கோவில், பேரூர் ஆதீனத்து கோவில் பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே அமைந்துள்ள, ஆடையூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்.தல வரலாறு

இத்தலத்தின் பெயர் ‘ஆதியூர்’ ஆகும். அடி அண்ணாமலை போல, இது ஆதி அகஸ்தீஸ்வரமாக இருந்து, காலப்போக்கில் ஆதியூர் என்பது மருவி ‘ஆடையூர்’ என பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இதனை இங்குள்ள கல்வெட்டு உறுதி செய்கிறது. இத்தலத்தின் இறைவனை அகத்தியர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளார் என்பது சிறப்பம்சமாகும். இதன் காரணமாக இத்தல இறைவனின் திருநாமம் ‘அகஸ்தீஸ்வரர்’ என வழங்கப்படுகிறது. தன்னை வணங்கும் தன் அடியாரின் பெயரைத் தன் பெயராக்கி மகிழும் இறைவனின் விருப்பப்படி, இப்பெயர் நிலைத்துவிட்டது.திருக்கோயில் திறக்கும் நேரம்:

தினமும் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை திறக்கப்படும்

அமைவிடம்:

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சந்திர லிங்கத்திற்கும், வாயு லிங்கத்திற்கும் நடுவில், வடக்கே காஞ்சி செல்லும் சாலையில், சுமார் அரை கி.மீ. தொலைவில் ஆடையூர் அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees