அருள்மிகு ஸ்ரீ கந்தநாத ஸ்வாமி ஆலயம் ஏரகரம் தஞ்சாவூர்

ருள்மிகு ஸ்ரீ கந்தநாத ஸ்வாமி ஆலயம் ஏரகரம் தஞ்சாவூர்
Arulmigu Vilvaneswarar Temple Thiruvaikavur !!

இறைவர் : அருள்மிகு ஸ்ரீ கந்தநாத ஸ்வாமி  

இறைவி : ஸ்ரீ சங்கரநாயகி அம்பாள்

தல மரம் : மரம்

தீர்த்தம் : தீர்த்தம்அருள்மிகு ஸ்ரீ கந்தநாத ஸ்வாமி ஆலயம் ஏரகரம் தஞ்சாவூர்

இந்தக் கோயிலை திருநாவுக்கரசர், கச்சியப்ப முனிவர், குமரகுருபர சுவாமிகள்,அருணகிரிநாதர், நக்கீரர் ஆகியோர் புகழ்ந்து பாடியுள்ளனர். இந்தத் திருத்தலம் 12-ம் நூற்றாண்டில் விக்கிரம சோழரால் கட்டப்பட்டது எனகூறப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு மூக்கு வாக்கு சித்திஸ்தலம் என்ற பெயரும்உண்டு. அது பற்றி கூறப்படும் கதை: குலோந்துங்க மன்னனுக்கு மூக்கு இல்லாமல் குழந்தை பிறந்தது. இதனால் மனம்வருந்திய மன்னன் ஜோதிடர்கள் கூறியதன் பேரில் ஸ்ரீஸ்கந்தரை வேண்டிக்கொண்டதனால் அந்தக் குழந்தைக்கு மூக்கு வந்ததால் முக்கு வாக்கு சித்திஸ்தலம் என்றபெயர் உண்டானது. மன்னனின் கண் நோயையும் இந்த இறைவன் தீர்த்து வைத்தார்.
ஆலய அமைப்பு :

கோவில் அமைப்பு: நான்கு புறமும் மதிற்சுவருடன் ஒரு முகப்பு வாயிலைக் கொண்டும், ஒரு பிராகாரத்துடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலைக் கடந்தால் ஒரு நீண்ட மண்டபம் நேரே இறைவன் சந்நிதிக்குச் செல்கிறது. நீண்ட மண்டபத்தின் முகப்பிலேயே வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு அம்பாள் சங்கரநாயகியின் சந்நிதி அமைந்துள்ளது. மண்டப முகப்பில் இடதுபுறம் நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார். கருவறைக் கோஷ்டத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி கண்டு தரிசிக்க வேண்டும். நவக்கிரக சந்நிதியும் இவ்வாலயத்தில் உள்ளது.திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.திருவிழாக்கள்மகரிஷி மோட்ச தலம் : :

மகாபாரதத்தில் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் வெளியேற யுத்திகள் கூறியவரும், குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்றதாக வரலாறு. ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள். இத்தலத்தில் பரிகார தெய்வமாக ‘ரிண விமோசன லிங்ககேஸ்வரர்’ விளங்கு கிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர். பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம். எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11-வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும். இங்குள்ள பைரவரை தொடர்ந்து எட்டு அஷ்டமி திதியில் அர்ச்சனை செய்து வழிபட்டு, ஒன்பதாவது அஷ்டமி திதி அன்று பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும்.

-->

அமைவிடம்:

கும்பகோணம் - திருவையாறு சாலையில் மேலக்காவேரியை அடுத்து, "யானையடி" என்னுடத்தில் திரும்பும் சாலையில் ஏரகரம் 3 கி.மீ. என்ற பெயர்ப் பலகையுள்ளது. அச்சாலையில் சென்றால் ஏரகரம் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து சுமார் 5 கி.மி. தொலைவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான இன்னம்பரில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் சாலை வழியில் வலதுபுறம் ஏரகரம் செல்லும் சாலை பிரிகிறது. அவ்வழியாகச் சென்றும் ஏரகரம் அடையலாம். இன்னம்பர் மற்றும் திருப்புறம்பியம் தலங்களிலிருந்து சுமார் 3 கி.மி தொலைவில் உள்ளது.Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees