அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ குணந்தந்த நாதர் திருக்கோயில் - ஒரக்காட்பேட்டை

ருள்மிகு அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ குணந்தந்த நாதர் திருக்கோயில் - ஒரக்காட்பேட்டை
Arulmigu Gunanthantha Nathar Temple - Orakatupettai Village -Kancheepuram !!

இறைவர் : அருள்மிகு ஸ்ரீ குணந்தந்த நாதர்  

இறைவி :அருள்மிகு திரிபுரசுந்தரியம்மன்.

தல மரம் :ஆல மரம்

தீர்த்தம் : குப்தகங்கை தீர்த்தம்

Arulmigu Kutram Porutha Nathar Temple - Thirukarupariyalur - Talainayiru


ருள்மிகு அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ குணந்தந்த நாதர் திருக்கோயில் - ஒரக்காட்பேட்டை

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், ஒரக்காட்பேட்டை என்ற கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ குணந்தந்த நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சுமார் 1000 ஆண்டுகளைக் கடந்த கோயிலாக விளங்குகிறது. மன்னர் பெருமக்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட பெருமையுடையதுஅருள்மிகு ஸ்ரீகோமதி அம்பாள் சமேத ஸ்ரீசத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் - களக்காடு தல வரலாறு.

அக்காலத்தில் பிரனேஷ்வனம் என்று அழைக்கப்பட்ட இக்காட்டுப்பகுதியின் வழியே பல வணிகர்கள் வியாபார நிமித்தம் வந்து செல்வதுண்டு. இப்படி வியாபாரிகள் பொருட்கள் கொண்டு செல்கையில் ஆத்தூர் என்ற ஊரருகே கள்வர்கள் வழிமறித்து கொள்ளையிட்டு வந்தனர்.

அப்படி ஒரு வணிகர் தன் பொருட்களை கொள்ளையர்களிடம் பறிகொடுத்து மனம் கலங்கினார். பின்னர், அவ்வனத்தில் ஒரு வில்வமரமாய் குடிகொண்டிருந்த சிவபெருமானை வேண்டினார். கள்வர்களுக்கு நற்குணத்தைக் கொடுத்து கவர்ந்து சென்ற தனது பொருள்களை அவர்களாகவே தன்னிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்றும் அதுவரையில் அவ்விடத்தை விட்டு செல்லமாட்டேன் என்றும் மனமுருகி வேண்டினார். பரமேஸ்வரனும் வேடன் உருக்கொண்டு அக்கள்வர்களை தாக்கிட, கள்வர்கள் ஓடிச்சென்று அக்காட்டில் இருந்த மாகாளி தேவியிடம் தஞ்சம் புகுந்தனர்.

தேவியும் அக்கள்வர்களை காக்கும் பொருட்டு வேடனை நெருங்கி வந்தார். வேடர் உருக்கொண்டு வந்தவர் சிவபெருமானே என்பதை அறிந்த மாகாளி கள்வர்களுக்கு நல்ல குணத்தை தந்தருள வேண்டினாள். அக்கள்வர்களும் நற்குணம் பெற்று தாங்கள் களவாடிய பொருள்களை அந்த வணிகரிடம் ஒப்படைத்ததாக வரலாறு. இந்த மாகாளி இவ்விடத்திற்கு வந்த வரலாற்றினைப் பார்ப்போம்.

ஒரு சமயம், சக்திதேவி ஈசனிடம் "இப்பிரபஞ்சத்தில் அனைவருக்கும் ஞான உபதேசம் செய்விக்க வேண்டும்' என்று கேட்க, ஈசனோ, "நீ பூலோகம் சென்று பிரனேஷ் வனத்தில் தவம் செய்தால், தக்க தருணத்தில் உமக்கு உபதேசம் செய்கிறேன்' என்றார். அதன்படியே சக்தியானவள் இக்காட்டில் மகா காளியாக கடும் தவமேற்று இருந்தபோது கள்வர்களுக்கு நற்குணம் தந்தாள். ஈசனும் சக்திக்கு உபதேசம் செய்தார். அதனால்தான் இத்தலத்தில் ஈசன், ஞான குருவாக, குணம்தந்த நாதராக திகழ்கிறார்.திருக்கோயில் திறக்கும் நேரம்:

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம்:Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees