அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில்

அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில்
அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில் - காஞ்சிபுரம்


Arulmigu Vazhakarutheeswarar Temple - Kancheepuram !!

இறைவர் : அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர்  

இறைவி : மறுவார் குழலி அம்மன்

தல மரம் :

திறக்கும் நேரம் : காலை 9.00 மணி முதல் பகல் 12 மணி வரை / மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில்

வழக்கறுத்தீஸ்வரர்
காஞ்சி மாநகரத்தில் 16 செல்வங்களை சிவ்லிங்கங்களாக உருவெடுத்து சோடாச லிங்கமூர்தமாக விலங்குகின்றது. அந்த சிவலிங்க மூர்தங்களுள் ஒருவரேய அருள்மிகு வழக்கறுதீஸ்வரர் பெருமான். வழக்குகளை தீர்த்து வைக்கும் கல் இந்த ஆலயத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இறைவன் தம்மிடம் வந்து கூரையிறந்து நெண்டும் அன்பர்களின் வழக்குகளை தீர்பதுடன் வழக்கிற்கு மூலக்காரணத்தை கண்டறிந்து அவர்கள் மனத்திலிருந்து நீக்கி அருள் பாலிக்கிறார். திருமுறைப் பாடல் பெற்ற சைவ திருக்கோவில்கள் 1028, மங்கள சாசனம் பெற்ற வைணவ 168 கோவில்கள் நிறைந்துள்ள காஞ்சியில் பீப் பாடலால் புகழ் பெற்று தன்னிகரற்ற ஸ்தலமாக திகழ்கிறது இந்த புண்ணியஸ்தலம்.

ஸ்ரீ வழக்கறுத்தீஸ்வரர்

ஒரு காலத்தில் முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே, வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொல்லான, “ஸத்’, “அஸத்’, ஆகியவற்றுக்கு பொருள் காண்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவற்றின் உண்மையான பொருளை அறிய தேவர்களும் முனிவர்களும் காஞ்சிபுரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அவர்களுடைய வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், அவர்கள் முன்தோன்றி பிரச்னையை தீர்த்து வைத்தார். இறைவனே நேரில் வந்து வழக்கை தீர்த்து வைத்ததால் இக்கோயிலில் உள்ள இறைவன் வழக்கறுத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் 16 திங்கட்கிழமை 16 விளக்கேற்றி வலம் வந்து வழிபட்டால் தீராத வழக்குகளும் தீர்ந்து வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதனால் திங்கட்கிழமை தோறும் அதிகாலை முதலே ஆயிரக்கணக்காண பக்தர்கள் கோயிலுக்கு வருவர்..

கருவறைக்கு எதிரே இருக்கும் நந்தி வித்தியாசமானவர்! ஒருமுறை... நந்திதேவருக்குப் பரிசாக தன்னுடைய புலித் தோலை வழங்கினாராம் இறைவன்! ஆமாம்... இங்கு உள்ள நந்திதேவர், புலித்தோலை அணிந்தபடி காட்சி தருகிறார். இதுபோன்ற நந்தி தரிசனம் அபூர்வம்! வாடாமல்லீஸ்வரரை தரிசியுங்கள்; மனதில் உள்ள அத்தனை வாட்டத்தையும் போக்குவார்; மனதை மல்லிகையாய் மலரச் செய்வார்!.

+91-9629073538

+91-9894975977

www.thirukalukundram.in@gmail.com

Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website of Arulmigu Vazhakarutheeswarar Temple , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees