அருள்மிகு ஸ்ரீ சமேத ஸ்ரீ சிவக்கொழுந்தீசுவரர் கோயில் - தீர்த்தனகிரி

ருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ சிவக்கொழுந்தீசுவரர் கோயில் - தீர்த்தனகிரி
Theerthanagiri Arulmigu Sivakoluntheeswarar Temple

இறைவர் : ஸ்ரீ சிவக்கொழுந்தீசுவரர் 

இறைவி : ஸ்ரீ மங்களாம்பிகை

தல மரம் : மரம்

தீர்த்தம் : ஜம்புவதடாகம்ருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ சிவக்கொழுந்தீசுவரர் கோயில் - தீர்த்தனகிரி

சிவக்கொழுந்தீசுவரர்_கோயில் சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் சுந்தரரால் தேவாரம் பாடல்பெற்ற சிவாலயமாகும். இத்தலத்தின் முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாலேயே இத்தலத்தின் தீர்த்தத்திற்கு ஜாம்புவதடாகம் எனும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகின்றது. இக்கோவில் கடலூர் மாவட்டம் தீர்த்தனகிரில் உள்ளது.
தல வரலாறு:

முன்பு ஒரு காலத்தில் இப்பகுதியில் வசித்து வந்த ஒரு விவசாய தம்பதியினர் சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன்பின்பு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு சமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணி, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றான். ஆனால், அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் அங்கு வந்தார்.

விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டான். முதியவர் அவனிடம், நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு! அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன், என்றார். விவசாயியும் ஒத்துக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினான். முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர்.

அப்போது, தோட்டத்தில் விதைக்கப்பட்டிருந்த திணைப் பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆச்சர்யமடைந்த விவசாயி சந்தேகத்துடனே முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினான். முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் ஒரே நாளில் திணைப்பயிர் விளைந்தது எப்படி? என தன் சந்தேகத்தை கேட்டான். முதியவர் அப்படியே மறைந்தார். சிவன் அவனுக்கு காட்சி தந்து, தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். மகிழ்ந்த விவசாயி சிவனை இங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.திருக்கோயில் திறக்கும் நேரம்:

இந்த ஆலயம் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

பிரார்த்தனை:

விவசாயம் செழிக்கவும், நாட்டியத்தில் சிறக்கவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். நடனம், இசை பயில்பவர்கள் இச்சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால், கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.தல பெருமை :

இந்த சிவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி சுவாமி மீது விழுகிறது. கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் அருகில் பெருமாள், பிரம்மன் இருவரும் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கின்றனர். நிருத்த விநாயகர் புடைப்புச்சிற்பமாக இருக்கிறார். அருகில் நான்கு பூதகணங்கள் அவரை வணங்கியபடி இருக்கிறது.

சிவன் உணவு சாப்பிட்ட கொன்றை மரம் பிரகாரத்தில் இருக்கிறது. கோயிலில் 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். அவருக்கு கீழே திருமால் தனது ஆயுதமான சங்கை வாயில் வைத்து ஊதிய படி இருக்கிறார்அமைவிடம்:

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது நாச்சியார்கோவில். இது வைணவ திவ்விய தேசத் தலம். இங்கிருந்து கிழக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது கூகூர். நன்னிலத்தில் இருந்து கூகூருக்கு சுமார் 15 கி.மீ. தொலைவு. பிரதான சாலையை ஒட்டி வடதிசையில் கோயில். நடக்கிற தொலைவுதான். கோயிலுக்கு வடக்கே திருமலைராஜன் ஆறு ஓடுகிறது.Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees