அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் உடனுரை கற்பகேஸ்வரர் திருக்கோவில் காரப்பாக்கம்

ருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் உடனுரை அருள்மிகு ஸ்ரீ கற்பகேஸ்வரர் திருக்கோவில் காரப்பாக்கம்


Arulmigu Karpagaeswarar Temple Kaarapakkam Chennai!!

இறைவர் : அருள்மிகு ஸ்ரீ கற்பகேஸ்வரர்  

இறைவி : ஸ்ரீ கங்கையம்மன் நாயகி

தல மரம் :

தீர்த்தம் : தீர்த்தம்



அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் உடனுரை கற்பகேஸ்வரர் திருக்கோவில் காரப்பாக்கம்

கற்பகேஸ்வரர்
கங்கை என்றதுமே அதன் நீர் வளமும், அது தரும் நில வளமுமே நம் நினைவுக்கு வரும். கங்கை தேவியானவள், தான் பாயும் வட இந்தியாவை வளப்படுத்துவது போல, தென் இந்தியாவையும் வளப்படுத்தும் விதமாக, இங்கே பல பகுதிகளில் ‘கங்கையம்மன்’ என்ற பெயரில் அம்மனாக இருந்து அருள்பாலித்து வருகிறாள். அதில் ஒரு திருத்தலம் தான் காரப்பாக்கம். இங்கு வீற்றிருந்து அருளும் கங்கையம்மன், தன்னை நம்பி வந்தவர்களை கைதூக்கி விடும் தேவியாக இருக்கிறாள். தன்னுடைய தலையில் இடம் அளித்த சிவபெருமானுக்கு, இத்தலத்தில் கங்கையம்மன் இடமளித்திருப்பது சிறப்புக்குரிய அம்சமாகும். ஆம்.. கங்கையம்மன் ஆலயத்திற்குள், தனி ஆலயமாக சிவாலயம் ஒன்றும் இருக்கிறது. கற்பகேஸ்வரர் ஆலயம் என்று அது அழைக்கப்படுகிறது.



ஸ்ரீ காளகஸ்தீஸ்வரர்

மன்னர் காலத்தில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, குலோத்துங்க வள நாட்டிற்குள் அமைந்திருந்த ஊர் காரப்பாக்கம் ஆகும். இங்கிருக்கும் கங்கையம்மன் ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இங்குள்ள குளக்கரை மரத்தடியில் சுயம்புவாக தோன்றியவள் இந்த அம்மன். இந்தப் பகுதி வாழ் மக்கள், விவசாயத்தின் விதை விதைப்பிற்கும், அறுவடைக்கும் அன்னையின் உத்தரவு பெற்றே செய்து வந்துள்ளனர். அறுவடைக்குப் பின், அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆடி மாதத்தில் கூழ் ஊற்றி, கும்பம் எடுத்தும், ஊரணிப் பொங்கல் வைத்தும் வழிபட்டுள்ளனர். மகாபலிபுரத்தில் இருந்து சென்னைக்கு மாட்டு வண்டி மூலம் செல்லும் யாத்திரிகர்கள், இத்தலத்து அன்னையை வழிபட்டு, இளைப்பாறிய பின்பே பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் அம்மனின் அருள் பார்வையால், மழை அதிகரித்து குளத்தில் வெள்ளம் வந்தது. இதனால் அம்மன் இருக்கும் இடத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. எனவே சிவனடியார் ஒருவரின் முயற்சியால் தற்போதைய ஆலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது. இந்த கங்கையம்மன் ஆலயத்தின் பின்புறத்தில் தான், கற்பகாம்பாள் சமேத கற்பகேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.



அமைவிடம்:

சென்னையில் இருந்து ஓ.எம்.ஆர். என்னும் பழைய மகாபலிபுரம் சாலையில் சோழிங்கநல்லூருக்கு முன்பாகவும், சென்னையில் இருந்து தெற்கே 23 கி.மீ. தொலைவிலும் காரப்பாக்கம் திருத்தலம் இருக்கிறது. காரப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தை ஒட்டியே ஆலயம் அமைந்திருப்பது சிறப்பு. காரப்பாக்கம் செல்வதற்கு ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.



+91-9629073538

+91-9894975977

www.thirukalukundram.in@gmail.com

Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website of Arulmigu Sri Kathalivaneswarar Temple , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees