அருள்மிகு அஸ்தபுரீஸ்வரர் திருக்கோவில் ஆனூர். - திருக்கழுக்குன்றம்

ருள்மிகு ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி உடனுரை அருள்மிகு ஸ்ரீ அஸ்தபுரீஸ்வரர் திருக்கோவில் ஆனூர். - திருக்கழுக்குன்றம்


Arulmigu Asthapureeswarar Temple Aanoor - Thirukalukundram !!

இறைவர் : அருள்மிகு ஸ்ரீ அஸ்தபுரீஸ்வரர்  

இறைவி : ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி

தல மரம் :

தீர்த்தம் : தீர்த்தம்அருள்மிகு அஸ்தபுரீஸ்வரர் திருக்கோவில் ஆனூர். - திருக்கழுக்குன்றம்

அருள்மிகு அஸ்தபுரீஸ்வரர் திருக்கோவில்
பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது ஆனூர். கூற்றுவநாயனாரும், புகழேந்திப் புலவரும் வாழ்ந்த பெருமை மிக்க தலம் இது. இங்குதான் எட்டாம் நூற்றாண்டில் பல்லவ அரசன் விஜய கம்பவர்மனால் கட்டப்பட்ட அஸ்தபுரீஸ்வரர் மற்றும் வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில்கள் உள்ளன. பராந்தக சோழன், ராஜராஜன், குலோத்துங்க சோழன், நாயக்கர்கள் காலத்திலும் இக்கோயில்களுக்கு பல திருப்பணிகள் நடந்துள்ளன.

ஆனுரின் முகப்பிலேயே இருக்கிறது அஸ்தபுரீஸ்வரர் கோயில். அஸ்தபுரீஸ்வரரை வழிபட்டால் வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடியும். காலத்தின் கோலத்தில் மிகவும் பாழடைந்து பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளது ஆலயம். கோயிலின் சுவர்களெல்லாம் ஆங்காங்கே இடிந்து அவற்றில் செடிகொடிகள் அடர்ந்து விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாகியுள்ளன. வரலாற்றைச் சொல்லும் கல்வெட்டுகள் மிகவும் பழுதடைந்துள்ளன. ராஜராஜன் காலத்தில் படகம், திமிலை, கரடிகை, காலம், சேகண்டி போன்ற இசைக்கருவிகள் இங்கு இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. .அமைவிடம்:

பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது ஆனூர். கூற்றுவநாயனாரும், புகழேந்திப் புலவரும் வாழ்ந்த பெருமை மிக்க தலம் இது. செங்கல்பட்டிலிருந்து திருக்கழுகுன்றம் செல்லும் பாதையில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது ஆனூர்.

+91-9629073538

+91-9894975977

www.thirukalukundram.in@gmail.com

Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website of Arulmigu Aram Valartha Nayaki and Sri Vadamaleeswarar Temple , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees