அருள்மிகு ஸ்ரீ வேதாந்தீஸ்வரர் திருக்கோவில் வல்லம் செங்கல்பட்டு

ருள்மிகு ஸ்ரீ ஞானம்பிகை உடனுரை அருள்மிகு ஸ்ரீ வேதாந்தீஸ்வரர் திருக்கோவில் வல்லம் செங்கல்பட்டு


Arulmigu Vedhantheeswarar Temple Vallam Chengalpattu !!

இறைவர் : அருள்மிகு ஸ்ரீ வேதாந்தீஸ்வரர்  

இறைவி : ஸ்ரீ ஞானம்பிகை

தல மரம் :

தீர்த்தம் : தீர்த்தம்அருள்மிகு ஸ்ரீ வேதாந்தீஸ்வரர் திருக்கோவில் வல்லம் செங்கல்பட்டு

அருள்மிகு ஸ்ரீ வேதாந்தீஸ்வரர் தல வரலாறு:
ஏழாம் நூற்றாண்டில், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வல்லம் என்ற ஊரில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கட்டிய குடவரைக் கோவில் இது. இங்கே ஒரு பெரிய மூதேவியின் சிலைஉள்ளது. சமசுக்கிருதம் எனும் தமிழ்கொண்டு சமைத்த மொழியில் வடிவாய்க் கூறினாலும், அதன் தமிழ்ப்பெயர் மூதேவி என்பதாகும். இம்மூதேவியைத்தான் பல்லவ மன்னர்களும் தங்கள் குலதெய்வமாகக் கொண்டாடி வந்துள்ளனர். அவ்வளவு ஏன்? அவர்களைப் பிற்காலத்தில் வென்றுப் பேரரசை நிறுவிய இடைக்காலச் சோழர்களும்கூட இம்மூதேவிக்குச் சிறப்பான வழிபாடுகள் செய்துள்ளனர். பல்லவர்கள் கல், மரம் உலோகம், சுண்ணாம்பு இன்றி இயற்கையாய் அமைந்த மலைகளையும் பாறைகளையும் குடைந்து குடவரைக் கோயில்களை உருவாக்கித் தனித்துவம் படைத்தனர்.

தொண்டை மண்டலத்தில் எங்கெல்லாம் வளமான, நன்கு விளைந்த, முதிர்ந்த பாறைகள் இருந்தனவோ, அங்கெல்லாம் அருமையான கலைக் கோயில்களை உருவாக்கினர். அவ்வாறு உருவான தலங்களுள் ஒன்றுதான் இந்த வல்லம். செங்கல்பட்டு அடுத்துள்ள வல்லம், "பட்சி தீர்த்தம்' என்று போற்றப்படும் திருக்கழுக்குன்றத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இத்தலத்தின் புராண வரலாற்றுக்கும் திருக்கழுக்குன்றத்துக்கும் தொடர்புண்டு.+91-9629073538

+91-9894975977

www.thirukalukundram.in@gmail.com

Web Designed & Hosted By S.Ramesh Steel Works, Desumughipet - Thirukazhukundram
Copyright © www.thirukalukundram.in, All Rights Reserved

This is not official website Arulmigu Vedhantheeswarar Temple Vallam Chengalpattu , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees