Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Rameswararm Arulmigu Ramanathaswamy Shiva Temple
அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் ராமேஸ்வரம்










Rameshwaram_Ramanathaswamy_ShivaTemple

இறைவர் : அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி

இறைவி : அருள்மிகு ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன்

God : Arulmigu Sri Ramanathaswamy

Godess : Arulmigu Sri Parvathavarthini Amman




இங்குள்ள சிவலிங்கம் சீதையால் மணலில் உருவாக்கப்பட்டு ராமபிரானால் புனிதமாக்கப்பட்டது.




அருள்மிகு ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் உடனுரை அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்

Rameswaram Temple History

  ராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது ராமேஸ்வரம். இத்திருக்கோவில் காசிக்கு நிகரான யாத்திரை தலமாக முக்கியத்துவம் பெற்றது.ராமேஸ்வரத்தில் வழிபாடும்,மகோததியும் (வங்காள விரிகுடா ),இரத்தினாகரமும் (இந்து மகா கடல் ), தனுஷ்கோடியில் முழுக்கும் செய்தால் காசியாத்திரை பூர்த்தியாகும்.

  ராமேஸ்வரம் என்பது ராமனால் பிரதிஷ்டை செய்யப் பெற்ற ஈஸ்வரன் எழுந்தருளியுள்ள புனித ஸ்தலம் என்பதை குறிக்கிறது. இத்திருத்தலத்தின் மூலஸ்தான மூர்த்தியை ராமேஸ்வரர், ராமலிங்கர், ராமநாதர், என்று பலவாறாக அழைப்பர். இராவணனிடமிருந்து சீதையை மீட்க இராவணணிடம் போர் புரிந்து அவனை கொன்றார் ராமன் ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக முனிவர்கள் கருத்துக்கு இசைந்து ராமன் சீதை லட்சுமணனுடன் சிவலிங்கங்களை பிரதிஷ்டை பெற்று வழிபட்டார்.

  சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்கு நல்லவேளை குறித்து கைலாசத்திலிருந்து லிங்கம் கொண்டு வரும் படியாக ராமன் அனுமனை அனுப்பியதாகவும், நெடுந்தொலைவில் உள்ள கைலாசத்திலிருந்து அனுமன் லிங்கம் கொண்டு வருவதற்கு காலம் தாழ்த்ததால், சீதை மணலால் செய்த லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டனர். திரும்பி வந்த அனுமன் கோபம் கொண்டு மணலால் செய்ய பெற்ற லிங்கத்தை அகற்ற முயன்றும் இயலவில்லை. அனுமனை ஆறுதல் செய்வதற்காக ராம லிங்கத்தின் பக்கத்தில் அனுமன் கொண்டு வந்த விசு லிங்கத்தை ஸ்தாபித்து, அதற்கே பூஜை முதலியன முதலில் செய்ய வேண்டும் என ராமன் ஆணையிட்டார். ராமனே ஈசுவரனை வணங்கியதால் இக்கோயில் மூலவர் சிவபெருமானுக்கு இராம நாத சுவாமி என்றும் ராமேசுவரம் அதாவது இராம ஈசுவரம் என்றும் பெயர் பெற்றது.

  இந்தியாவிலுள்ள உள்ள 12 ஜோதிர்லிங்களுள் ஒன்று ராம லிங்கம் மற்றவை காசி, கேதாரம், சோமநாதம், உஜ்ஜயினி, ஓங்காரம், வைத்தியநாதம், பீமா சங்கரம், நாகேசம், திரியம்பகம், குசுமேசம், ஸ்ரீசைலம் இவற்றிலுள்ளவை. ராமேஸ்வரம் கோயிலில் விசாலாட்சி அம்மன் சன்னதிக்கு பக்கமுள்ள ஜோதிர் லிங்கம் விபீஷணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

விசுவநாதர் சந்நிதி

அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்த விசுலிங்கம் எழுந்தருளியுள்ள சன்னதி, ராமநாதசுவாமி சன்னதிக்கு வடப்புறம் இருக்கிறது.இத்திருக்கோயிலின் முதல் பூஜை விஸ்வநாதருக்கு தான் நடைபெறும்.

விசாலாட்சி அம்மன்

விஸ்வநாதரின் தேவியரான விசாலாட்சி அம்மன் எழுந்தருளியுள்ளார்.விசாலாட்சி அம்மன் விஸ்வநாதருக்கும் சேர்த்தே முதல் பூஜை நடைபெறுகிறது.

பர்வதவர்த்தினி அம்மன்

இராம நாத சுவாமியின் தேவியரான பர்வதவர்த்தினிஅம்மன் எழுந்தருளியுள்ளார்.ராமநாதஸ்வாமியின் வலதுபுறம் தெற்கே அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள ஸ்ரீ சக்கரம் அவசியம் பார்த்து வழிபடத்தக்கது.





காலை 5.00AM முதல் 1.00PM வரை, மாலை 3.00 PM முதல் இரவு 9.00PM வரை திறந்திருக்கும்.




Ramanathaswamy Rameswaram Temple poojai Time




பள்ளியறை தீபாராதனை - காலை 5.00 A.M

ஸ்படிகலிங்க தீபாராதனை - காலை 5.10 A.M

திருவனந்தல் தீபாராதனை - காலை 5.45 A.M

விலா பூஜை - காலை 7.00 A.M

காலசந்தி பூஜை - காலை 10.00 A.M

உச்சிகால பூஜை - நண்பகல் 12.00 P.M

சாயரட்சை பூஜை - மாலை 6.00P.M

அர்த்தஜாம பூஜை - இரவு 08.30 P.M

பள்ளியறை பூஜை - இரவு 08.45 P.M



Rameshwaram_Ramanathaswamy_ShivaTemple



Arulmigu Sri Parvathavarthini Amman And Arulmigu Ramanathaswamy Temple,Rameswararm

History Sri Ramanathaswamy Temple

  Ramanathaswamy Temple is a hindu temple dedicated to God Shiva located in Rameswararm an Ramanathapuram District in tamilnadu.Rameswaram is one of the famous piligrim center in TamilNadu. The Ramanathapuram Ramanathaswamy Temple is one of the 276 Thevaram Padal Petra Sthalams of Lord Shiva. In Ramanathapuram Temple God Name is Shree Ramanathaswamy and Amman name is Shree Parvathavarthini Amman.Arulmigu Ramanathaswamy Thirukovil is the most important of Rameswaram Island. The religious importance of this Rameswaram temple is The presiding deity, the Lingam of Ramanathaswamy (God Shiva), is believed to have been established and worshiped by Rama. This temple has 22 theerthams, bathing in which is believed to atone sins of devotees. Sri Ramanathaswamy temple is regarded with high significance even in holy scripture of Hindu religion.

Viswanathar Temple - Visuva Lingam

Vishulingam brought by Hanuman is situated north of the Ramanathaswamy shrine,The first pooja of the temple is held for Viswanathar and also visalatchi Amman

Parvadavarthini Amman

Parvadavarthini Amman, the Goddess of Rama Natha Swami. Ramanathaswamy's right is located to the south. The Sri Chakra in this shrine is a must see and worship..






Rameshwaram_Ramanathaswamy_ShivaTemple






Rameswararm Temple




Thirukalukundram Thirupurasundsri Amman





இத்தலத்தில் உள்ள சிவ லிங்கம் சீதையால் மணலில் உருவாக்கப்பட்ட ராமபிரான் புனிதமாக்கப்பட்டு ராம லிங்கம் பிரதிஷ்டை செய்யும் படம்

      











Rameshwaram_Ramanathaswamy_ShivaTemple Rameshwaram_Ramanathaswamy_ShivaTemple






Rameswaram Temple map