Mylapore Arulmigu Karpagambaal and Arulmigu Kabaliswarar Temple
அருள்மிகு கற்பகாம்பாள் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் - மயிலாப்பூர்



Mylapore \ Thirumayilai Temple


இறைவர் : அருள்மிகு கபாலீஸ்வரர்  

இறைவி :அருள்மிகு கற்பகாம்பாள் அம்மன்

தல மரம் : புன்னை மரம்

தீர்த்தம் : கபாலி தீர்த்தம்


God : Arulmigu Kabaliswarar  

Godess :Arulmigu Karpagaambaal Amman

Tree : Punnai Maram

Theertham : Kabali Theertham

Arulmigu Kabaliswarar Temple - Thirumayilai / Mylapore !!

Mylapore Arulmigu Kabaliswarar Temple - Thirumayilai



கபாலீஸ்வரர் துதி



அருவாகி யுருவாகி யுருவங் கடந்துண்மை
      யறிவா னந்தத்
தருவாகிச் சரமசர மிருவகைக்குந் தாயாகி
      தாணு வாகித்
திருவாகி யயனாகித் தீயாகித் நீராகித்
      திருமா லாகிக்
கருவாகி முளைத்த கபாலிப் பெருமான் திருவடியைக்
      கருதி வாழ்வாம்

கற்பகாம்பாள் அம்மன் துதி



பூரணியென் றொருபெயரு நாரயணியென் றொருபெயரும்
      போதா வென்றே
வாரணிந்த குயமுடைய மலையரையன் மகளென்றும்
      வலைமா தென்றும்
ததாரணிந்த முடிசூடித் தடாதகையென் றொருபெயருந்
      தானே கொண்ட
காரணியா மயிலைவளர் கற்பகவல் லிக்கனியைக்
      கருதி வாழ்வாம்





அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் மயிலாப்பூர்




அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் மயிலாப்பூர்


இறைவி மயிலாக வந்து இறைவனை பூசித்தமையால் இப்பதி மயிலாப்பு ,மயிலாப்பூர் என்ற பெயர்களை கொண்டது. அவற்றின் மரூஉவே மயிலை என்பதாகும். கபாலீஸ்வரர் வீற்றிருந்ததால் கபாலீச்சரம் என்ற பெயரும் பெற்றது.புண்ணை இத்தலத்து விருட்சமாதலால் புன்னைவனம் என்பதும்,வேதங்கள் பூசித்தமையால் வேதபுரி என்பதும் சுக்கிரன் பூசித்தமையால் சுக்கிரபுரி என்பதும் இத்தலத்துக்குரிய வேறு பெயர்களாகும்.இத்தலத்தில் திருஞானசம்மந்தர் அருளிய அங்கம் பூம்பாவை ஒவ்வொரு பாடலிலும் மயிலையில் மாதந்தோறும் புரட்டாசி முதல் ஆணி வரை நடைபெறும் திருவிழாக்களை கூறி இந்த விழாக்களை காணாமல் போதியோ பூம்பாவாய் என அருள செய்கின்றார்.

உமையம்மையார் மயிலுருக்கொண்டு கபாலீசுவரரைப் பூஜித்த தலம். முருகப்பெருமான் மயிலை நாதனை வழிபட்டுச் சக்திவேல் பெற்ற தலம். பிரம்மா பூஜை செய்து தன் இறுமாப்பு நீங்கி தனது படைக்கும் ஆற்றலைப் பெற்ற தலம். நான்மறைகள் பூஜித்ததால் வேதபுரி என்னும் பெயர் பெற்ற திருத்தலம். சுக்கிரன் பூஜித்ததால் சுக்கிரபுரி என்னும் பெயரும் பெற்ற திருத்தலம். இராம பிரான் நேசித்துத் தங்கியிருந்து பூசித்துத் திருவிழா நடத்திய தலம். திருஞானசம்பந்தப் பெருமான் எலும்பைப் பூம்பாவையாக்கிய புகழ்தலம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய வாயிலார் தோன்றிய தலம். பன்னிரண்டு ஆழ்வார்களில் மூன்றாமவராகிய பேயாழ்வார் பிறப்பெடுத்த பெருமைத் தலம். ஆளுடைய பிள்ளை - ஆளுடைய அடிகள் தேவாரம் பெற்ற திருத்தலம்.சீர்த்திமிகு சிங்காரவேலன் கீர்த்திமிகு திருப்புகழைப் பெற்ற தலம். வான்புகழ் கொண்ட வள்ளுவர் புகழோடு தோன்றிய தொன்மைத்தலம்



Thirumayilai Arulmigu Kapaliswarar Temple Mylapore


Mylapore Temple is a Hindu Temple dedicated to God Shiva Located in the place of mylapore,Chennai.In Mylapore Temple God Siva name is Shree Kabaliswarar And Amman Name is Shree Karpagambaal, God Kapaliswarar is Swaysmbu Murthi in this Mylapore Tempe.Mylapore Arulmigu Kapaliswarar Temple is one of the famous Shiva Temple in Tamil Nadu.Mylapore Arulmigu Kapaliswarar Temple is one of the 274 Thevaram Padal Petra Sthalam of lord Shiva.There is the place Godess parvathy took form of peacock and worshiped God Kabaliswarar in Mylapore.God Shiva here is known as shri Punnaivananathar.The Godess Parvathi in a peacock form can be seen in this shirine.

Thiruvizha at Kapaleeswarar temple Chennai

1.10 Days Panguni Thiruvizha in March, April.
2.Arubathimoovar Thiruvizha
3.Vasantha Urchavam.
4.9 Days Navarathiri Thiruvizha in Puratasi Month.
5.Theppal Thiruvizha





Mylapore Temple Opening Time

5.00AM To 12.30PM 4.00PM to 9.30PM