Shri Vedhagiriswarar Temple Thirukalukundram


ThiruMayilai Arulmigu Kabaliswarar Shiuva Temple Mylapore
திருமயிலை அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில், மயிலாப்பூர்

Mylapore \ Thirumayilai Temple


இறைவர் : அருள்மிகு கபாலீஸ்வரர்  

இறைவி :அருள்மிகு கற்பகாம்பாள் அம்மன்

தல மரம் : புன்னை மரம்

தீர்த்தம் : கபாலி தீர்த்தம்


God : Arulmigu Kabaliswarar  

Godess :Arulmigu Karpagaambaal Amman

Tree : Punnai Maram

Theertham : Kabali Theertham

Arulmigu Kabaliswarar Temple - Thirumayilai / Mylapore !!

திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் அம்மன் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் மயிலாப்பூர்.



திருமயிலைத் தலவரலாறு



பார்வதியின் மயிலுருவம் நீங்கியது



ஒரு காலத்தில் பரமசிவன் பார்வதி சமேதராய் கைலாய கிரியில் ஏழுந்தருளி இருக்கையில் அவரை தரிசிக்க தேவர்கள் பலரும் வந்தனர். அப்பொழுது அவரவர்கள் கூறிய குறைகளை கேட்டு அவரர்களுக்கு தகுந்த விஷயங்களை புத்திமதிகளாக கூறி அனுப்பி விட்டார்.அவர்கள் போனதும் பரமசிவன் பார்வதியை நோக்கி உனக்கு விபூதி பஞ்சாக்ஷரம் இவைகளின் மகிமைகளை எடுத்து கூறுகிறேன் என்று கூறியவாறு செய்ய தொடங்கினார். "விபூதி" அணிபவர்களுக்கு மிகுந்த சிறப்பை உண்டாக்கி அவர்கள் பாபத்தை நீக்கும்.ஒரு ஊரில் ஒரு கொடிய பிராமணன் இருந்தான். அவனிடம் எல்லா மகா பாதங்களும் குடிகொண்டிருந்தன.அவன் சேரி வழியாக போகையில் அங்கு பெரு பெண்ணை கண்டு அவளிடம் சல்லாபங்களை செய்ய தொடங்க அவள் நாயகன் இவனை ஒரே வெட்டாக வெட்டி இவன் தேகத்தை சேரிக்கு வெளியில் இருந்த புதரில் எரிந்து விட்டான். அந்த பிணத்தை ஒரு நாய் தன்னை வந்து அதன் பேரில் ஏறிக்கொண்டது. இந்த நாய் மசானத்தில் அலைந்து கொண்டிருந்ததால் இதன் கால்களில் சாம்பல் படிந்தியிருந்தன. இந்த சாம்பல் அந்த பிணத்தின் மேல் பட்டதும் அவன் திவ்ய லோகம் பெற்றான்.



அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் மயிலாப்பூர்



"நமச்சிவாயம் " என்பது என் தேகமே அதுதான் இப்பிரபஞ்ச ரூபமாக இருப்பது.அதை ஓம் என்ற ப்ராணாவதோடு உச்சரித்தால் ஒருவன் எளிதில் பரமபதம் பெறுவான் என்றார்.இவ்வாறு பகவான் கூறுகையில், அருகாமையில் வந்திருந்த ஒரு மயிலின் மேல் தேவியினது கருத்து செல்ல பகவான் செய்த உபதேசம் அம்பிகையின் காதில் ஏறவில்லை.மறுபடி கூற வேண்டும் என்று பகவானை பிரார்த்திக்க அவர் இந்த நல்ல சமயத்தில் உன்மனம் மயில் மையமாக இருந்ததால் நீ மயிலாக கடவாய் என்று சபித்தார்.சாப விமோசனத்தை பற்றி விசாரித்த காலத்தில் உலகத்தில் பாலாற்றுக்கு வடபாகத்தில் "கபாலிபுரம்"என்ற பட்டணம் உண்டு.அதில் நாம் திவ்ய லிங்கமாக எழுந்தருளி இருக்கிறோம். அங்கு சென்று எம்மை பூஜித்து சாபம் நீங்குவாய் என்ற உத்தரவு பிறந்தது.

இதை கேட்டதும் மிகுந்த விநயத்துடன் சாபத்தையேற்று பூமியை சுற்றி வலம் வந்து திவ்ய சேத்திரங்களில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் பரமசிவத்தை தரிசித்துக்கொண்டு முடிவில் கபாலிபுரம் வந்தாள். உடனே அவளுக்கு மயில் உருவம் வர இங்குள்ள கடலில் ஸ்தானம் செய்து இவ்வூர் புஷ்கரணி வந்து அதில் சகல திவ்ய தீர்த்தங்களையும் வருவித்து ஸ்தானம் செய்தாள்.பின்னர் புஷ்பங்களை சேகரித்துக்கொண்டு கோயிலுள் புகுந்து புண்ணை மரத்தடியிலிருந்து கபாலி நாதரை விதிப்படி பூஜித்தாள்.பூஜையின் முடிவில் பகவான் வ்ருஷபாரூடராக ப்ரத்யக்ஷமாகி அம்பிகையின் மயிலுருவத்தை நீக்கி அவளை தம்முடன் சேர்த்துக்கொண்டார்.



அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் மயிலாப்பூர்



அப்பொழுது அம்பிகையின் வேண்டுகோளின்படி கபாலிபுரத்திற்கு திருமயிலை என்ற பெயருண்டாகும் படியாகவும், இதற்கு பாபம் நீக்கும் திறன் முதலிய திவ்ய சக்தி வரும் படியாகவும் பகவான் அனுகிரகித்தார்.அம்பிகை மயிலாக இருக்கையில் பகவானை பூஜித்தது,இந்த ஊரில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தின் முதல் நாள் இரவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

வாயிலார் நாயனார் சரித்திரம்

வாயிலார் நாயனார் திருமயிலையில் வேளாளர் குலத்த்தில் பிறந்தவர். அவர் வாழ்கை தொழில் பகவத் ஆராதனை மாத்திரமாயிருந்த படியால் அவர் வாழ்நாளில் அற்புத விஷயங்கள் ஒன்றும் ஸ்தம்பிக்கவில்லை. இந்த தொழில் பெரும்பாலாருக்கும் மிக சாரமற்றதாக தோன்றும் ஆயினும் அது நாயனார் ஆயுள் முழுவதும் கவர்ந்து அவருக்கு பேரானந்தத்தை அளித்துக்கொண்டு வந்தது.வாயிலரது பூஜை மிக அற்புதமானது. ஊரில் உள்ள கோயிலுக்கு அவர் போனவரேயல்லர். அங்கு நடக்கும் விஷயங்கள் அவர் மனோநிலைக்கு தாழ்ந்தவைகளாகவே அவருக்கு பட்ட படியால் அவர் ஓர் பெரிய கோயில் கட்டினார். அதைப்போன்ற சிறந்த கோயில் இவுலகில் எங்கும் இல்லை. அதற்கு அநேகம் பொற்கோபுரங்களை அமைத்தார். வெள்ளிச்சுவர், ரத்ன ஸ்தம்பங்கள் அங்கு அமைத்தார்.முதலியவைகளோடு கூடிய விஸ்தாரமான மண்டபங்களை அமைத்தார்.பஞ்சலோகங்களால் செய்த ஐந்து பிரகாரங்களையும் இயற்றி அவைகளுள் வெளிச்சுவரை இரும்பாலும்,உள்சுவரை பொன்னாலும் அமைத்தார்.


இந்த கோயிலின் மத்தியில் தான் கைலாயத்திற்கு சமமாகிய மூலஸ்தானத்தை அமைத்தார். இதில் பகவத் ஸ்வரூபமான மூல லிங்கம் அமைக்கப்பட்டு, விலை உயர்ந்த ஆபரணங்கள், நல்லபரிமளம் வீசும் புஷ்பங்கள் ஆகியவை ஆனந்தமாக அலங்கரிக்கப் பெற்றிருந்தது. இந்த லிங்கத்தின் இரன்டு புறத்திலும் இரண்டு கல்பக விருக்ஷங்கள் அமைக்க பட அவைகள் தமது திவ்ய கந்தகத்தை கோயிலெங்கும் பரவ செய்தன.இவளவு சிறந்த கோயிலை கட்ட போதுமான திரவியம் வாயிலருக்கு எங்கு கிடைத்தது ? அவர் எங்கு கட்டினார் என்ற சங்கை ஏல்லோருக்கும் பிறக்கும். அவர் திரவியத்தால் இந்த கோயிலை கட்டவில்லை. அவர் கற்பனாசக்தியே இதற்கு காரணம். இவ்வற்புத கோயிலை அவர் தமது மனதிலே கட்டிக்கொண்டார். தமது சாப்பாடு, தூக்கம், தொழில் முதலியவைகளைக்கூட மறந்து இராப்பகல் ஒழிவு இன்றி இப்பகவானுக்கு பூஜைகளை நடத்துவார்.அவர் மௌனமான மானஸ பூஜையின் சிறப்பு காலக்கிரமத்தில் பலர் அறிய வெளிவர அவர் விதேக முக்தி பெற்றதும் சமாதி செய்யப்பெற்ற நாயன்மார்களுடன் ஒருவராக மதிக்கப்பெற்றார் என்று புராணங்கள் கூறும்.இப்பொழுது திருமயிலை அம்பாள் சன்னதிக்கு எதிரில் பிரகாரத்தில் வாயிலா நாயனார் கோயில் இருப்பதை யாவரும் காணலாம்.