Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Thirukalukundram.in

Thirukalukundram.in







Hindu Temple in Tamil nadu

Tamilnadu Shiva Temples
Shiva Temple In Tamilnadu

தமிழக சிவன் திருக்கோயில்கள்

read More....
Tamilnadu Shiva Temples

274 Shiva Temples tamilnadu

274 தேவாரத் திருத்தலங்கள்

read More....
Tamilnadu Shiva Temples
Vainava Temple In Tamilnadu

தமிழக பெருமாள் திருக்கோயில்கள்

read More....
Tamilnadu Shiva Temples
108 Divya desam

108 வைணவத் திருத்தலங்கள் (திவ்ய தேசங்கள்)

read More....
Tamilnadu Shiva Temples
Famous Shiva Temples In Tamilnadu

புகழ் பெற்ற சிவன் திருக்கோயில்கள்

Read More....



Thirukalukundram Temple - Famous Shiva Temple In Tamilnadu



Thirukalukundram the sacred hill of the eagles are also called pakshi thirtham near chengalpattu in tamilnadu.Thirukulkundram is situated 14 km southeast of Chengalpattu. It is a picturesque town located 17 km from Mamallapuram.there is also a the temple dedicated to lord shiva known as vedhagiriswarar and the godess thiripurasundari amman.The Thirukalukundram Vedagiriswarar Temple is one of the 276 Thevaram Padal Petra Sthalams of Lord Shiva. thirukalukundram temple is the very famous shiva temple in tamilnadu the picturesque thirukazhukundram vedhagiriswara temple at the top of the hill and the magnificent temple complex of the bhakthavatchaleswarar in the heart of the town.the thirtham is known as (conch)sangu thirtham.it nalso said once in 12 years a conch used to appear from this sangu thirtham tank with bubbole and loud sound.




திருக்கழுக்குன்றம் - அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில்



திருக்கழுக்குன்றம் என்னும் இத்திருத்தலம் தென்னிந்தியாவின் உள்ள மகத்துவம் வாய்ந்த தேவாரம் பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்று.திருக்கழுக்குன்றம் அல்லது பட்சி தீர்த்தம் திருக்கோயில் சான்றோர் மிக்க தொண்டை நாட்டினுள் செங்கல்பட்டுக்கு தென்கிழக்கே 14 கிலோ மீட்டர் தொலைவில் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள அழகிய திருத்தலம்.இந்த திருக்கழுக்குன்றத்தின் உச்சியில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள வேதகிரீஸ்வரரை கழுகுகள் பூசித்து பேறு பெற்ற காரணத்தினால் இத்தலத்திற்கு திருக்கழுக்குன்றம் என்று பெயர் பெற்றது . இன்றும் பட்சி பாறையில் வந்து அமர்ந்து சைவ பண்டாரம் படைக்கின்ற சர்க்கரை பொங்கலை உண்டு செல்வதை காணலாம். இந்த கழுகுகள் காசியில் கங்கா ஸ்தானம் செய்து ராமேஸ்வரத்தில் ராமநாத ஸ்வாமியை தொழுது பட்சி தீர்த்தத்தில் வேதகிரீஸ்வரரை வணங்கி உணவு அருந்தி பின் சிதம்பரம் சென்று உறங்கும். .

இந்த திருக்கழுக்குன்றத்தில் மலை மேல் அமர்ந்த வேதகிரீஸ்வரரை இந்திரன், பிரம்மன், முருகன், சூரியன், சந்திரன் ஆகியோர் பூஜித்து , பனிரெண்டு ஆண்டிற்கு ஒரு முறை இடியொன்று கோவிலின் உச்சியில் மின்னல் கொடியாக உட்புகுந்து வேதகிரீஸ்வரரை மும்முறை வலம் வந்து ஒரு வித தீங்கும் இழைக்காமல் பூமிக்குள் மறையும். மலை அடிவாரத்தின் அருகில் மூவர் கோயில் என்று அழைக்கப்படும் திருக்கோவில் உள்ளது. அப்பர், சுந்தரர், திருஞான சம்மந்தர், ஆகிய மூவரும் மலையை மிதித்து ஏறினால் பாவம் உண்டாகுமோ என அஞ்சி மலை அடிவாரத்திலேயே நின்று தேவார பதிகங்களை பாடி துதித்தனர். மாணிக்கவாசகர் சில நாட்கள் தங்கியிருந்து திருப்பெருந்துறையில் கண்ட குரு தரிசனங்களை கண்டு ஆட்கொள்ளப்பட்டதும் இந்த திருக்கழுக்குன்றம் திருத்தலத்தில் தான்.திருப்பெருந்துறையில் பெற்ற திருவடிகளை சிரமேற்றாங்கி வந்து இந்த திருக்கழுக்குன்ற தலத்தில் வைத்தார்.இதனை விளங்குகின்ற நின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே கலங்கினேன் கலங்காமலே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே! என்னும் திருவாக்கு தெரிவிக்கின்றது.